உங்கள் 1099-K இல் உள்ள மொத்தத் தொகை, உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த வைப்புத் தொகையுடன் பொருந்தாது. ஏனென்றால், உங்களுக்கு டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையே உங்களின் நிகர சம்பாத்தியமாகும் (Uber க்குச் செலுத்தப் பட்ட அனைத்துக் கட்டணங்களும் கழிக்கப் பட்ட பின் உள்ள உங்கள் மொத்தக் கட்டணம்.) ஒப்பிடுகையில், 1099-K ஆனது மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைகளுக்கான அனைத்து சம்பாத்தியத்தையும் உள்ளடக்கியது (இந்த விஷயத்தில், பயணிகளிடமிருந்து ஓட்டுநர்களுக்கு). கட்டணங்கள், சுங்கக் கட்டணங்கள், நகரக் கட்டணங்கள், விமான நிலையக் கட்டணங்கள், பிரிப்புக் கட்டணங்கள் மற்றும் முன்பதிவுக் கட்டணங்கள் ஆகியவற்றிலிருந்து இந்த சம்பாத்தியம் கணக்கிடப்படுகிறது. உங்களின் குறிப்பிட்ட 1099-K உருப்படிகளின் மொத்த சம்பாத்தியத்தைக் காண, உங்கள் ஓட்டுநர் டாஷ்போர்டில் உள்ள வரிச் சுருக்கத்தைப் பார்வையிடவும்.
Uber வரி ஆலோசனையை வழங்காது என்பதால், உங்களிடம் ஏதேனும் வரித் தொடர்பான கேள்விகள் இருந்தால், சுயேச்சை வரி நிபுணரைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். நீங்கள் IRS பகிர்வு பொருளாதார வரி மையத்தின் பக்கத்தையும் பார்க்கலாம்.