மூன்றாம் தரப்பு வழிசெலுத்தல் ஆப்பைப் பயன்படுத்துதல்

ட்ரைவர் ஆப்பினுள் ஜி.பி.எஸ் வழிசெலுத்தல் உள்ளது, ஆனால் Uber பயணங்களின் போது மூன்றாம் தரப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தேர்வும் உங்களுக்கு உள்ளது. நீங்கள் உபயோகிக்க விரும்பும் வழிசெலுத்தல் ஆப்பைத் தேர்வுசெய்யவும்.

உங்கள் இயல்புநிலை வழிசெலுத்தல் ஆப்பை அமைக்க:
1. மேல் வலது மூலையில் உள்ள சுயவிவரப் புகைப்படத்தைத் தட்டவும்
2. மேல் மெனுவிலிருந்து "அகௌண்ட்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
3. ”ஆப் அமைப்புகள்” என்பதைத் தட்டவும்
4. ”வழிசெலுத்தல்" என்பதைத் தட்டவும்
5. நீங்கள் உபயோகிக்க விரும்பும் ஆப்பை, உங்கள் இயல்புநிலை ஆப்பாகத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் இயல்புநிலை வழிசெலுத்தல் பயன்பாடாக மூன்றாம் தரப்புப் பயன்பாட்டை நீங்கள் தேர்வுசெய்தால், பயணத்தின் போது NAVIGATE பொத்தானைத் தட்டுவது, ட்ரைவர் ஆப்பிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த வழிசெலுத்தல் ஆப்பிற்கு உங்களை நகர்த்தும்.

மூன்றாம் தரப்பு வழிசெலுத்தல் ஆப்பைப் பயன்படுத்தும் போது, உங்கள் கட்டணம் சரியானது என்பதை உறுதிப்படுத்த ட்ரைவர் ஆப் பயண விவரங்களைத் தொடர்ந்து பதிவுசெய்யும். Uber ஆப்புக்குத் திரும்ப, திரையின் மேற்புறத்தில் உள்ள பேனரைத் தட்டவும்.