பதிவு செய்வதற்கான படிகள் என்னென்ன?

Uber இல் வாகனம் ஓட்டப் பதிவு செய்வது எளிது. Uber தளத்தில் உங்களைப் பற்றியும் நீங்கள் ஓட்ட விரும்பும் வாகனத்தைப் பற்றியும் சில தகவல்களைப் பகிர்வதன் மூலம் நீங்கள் தொடங்கலாம். ஓட்டுநர் ஆப்பைப் பதிவிறக்கம் செய்வது பதிவு செய்வதற்கான சிறந்த வழி. drivers.uber.com தளத்திலும் பதிவு செய்யலாம்.

நாங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டியவை:

  • உங்கள் ஓட்டுநர் உரிம எண்
  • உங்கள் வாகனப் பதிவு ஆவணம்
  • உங்கள் நகரத்தில் நடைபெறும் ஓட்டுநர் தகுதிகாணலுக்கான கூடுதல் தகவல்களும் ஆவணங்களும்

தேவையான ஆவணங்களைச் சரிபார்த்து நாங்கள் ஒப்புதல் அளித்ததும், ஆப்பிற்கான முழு அணுகலுடன் ஆன்லைனுக்குச் சென்று பயணக் கோரிக்கைகளைப் பெற்று நீங்கள் சம்பாதிக்கத் தொடங்கலாம்.