எனது பயணச் சம்பாத்தியத்தை எங்கே பார்க்கலாம்?

உங்கள் திரையின் மேற்புறத்தில் உள்ள கட்டண ஐகானைத் தட்டுவதன் மூலம் அல்லது சம்பாத்தியம் தாவல் மூலம் உங்கள் ஓட்டுநர் ஆப்பில் வாரம், நாள் அல்லது பயணம் வாரியான உங்கள் சம்பாத்தியத்தைக் கவனித்துவரலாம்: சம்பாத்தியம் என்ற தாவலைக் காண: 1. மேல் இடது மூலையில் உள்ள மெனு பொத்தானைத் (மூன்று கோடுகள்) தட்டவும். 2. மேல் மெனுவில் "சம்பாத்தியம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நடப்பு வாரத்திற்கான உங்கள் மொத்தச் சம்பாத்தியம் அந்த தாவலின் மேல்பகுதியில் காட்டப்படும். உங்கள் மொத்தச் சம்பாத்தியத்திற்குக் கீழே உள்ள வரை கட்டத்தைத் தட்டினால், வாராந்திர வருவாய், செலவுகள் மற்றும் கேஷ் அவுட்களை தனித்தனிப் பிரிவுகளாகப் பார்க்கலாம். வரை கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தட்டினால், அந்த நாளுக்கான பயணக் கட்டணங்களின் மொத்தச் சம்பாத்தியத்தைப் பார்க்கலாம். முந்தைய வாரங்களுக்கான வரை கட்டத்தைப் பார்க்க, இடதுபுறமாக தேய்க்கவும். பயண வரலாறு என்ற தாவல் உங்கள் மிகச் சமீபப் பயணங்களைக் காட்டும். ஒரு குறிப்பிட்ட பயணத்தைத் தேர்ந்தெடுத்தால், அந்தப் பயணத்தின் மொத்தக் கட்டணமும் நிகரக் கட்டணமும் காண்பிக்கப்படும். கட்டணச் சுருக்கம் என்ற தாவல் கடந்த வாரங்களுக்கான உங்கள் வாராந்திர சம்பாத்தியத்தின் விவரச் சுருக்கங்களைக் காட்டும். ஒவ்வொரு வாரச் சுருக்கத்திலும் கீழே ஸ்க்ரோல் செய்தால், அந்த வாரத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கான தினசரி சம்பாத்தியத்தைப் பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்தால், அந்த நாளுக்கான பயணங்கள் மற்றும் பயண விவரங்கள் காண்பிக்கப்படும். உங்கள் ஓட்டுநர் ஆப்பில் தோன்றும் தொகையும் உங்கள் டேஷ்போர்டில் தோன்றும் தொகையும் ஒன்றாக இருக்கும். உங்கள் ஓட்டுநர் ஆப்பில் காண்பிக்கப்படும் சம்பாத்தியமானது Uber சேவைக் கட்டணமும் மற்றும் பிற பொருந்தகூடிய கட்டணங்களும் வசூலிக்கப்பட்ட பிறகு உள்ள உங்கள் நிகர சம்பாத்தியத்தின் கணிப்பாகும். உங்கள் ஆப்பில் காண்பிக்கப்படும் நிகரக் கட்டணங்கள் உங்கள் இறுதி அறிக்கையுடன் சரியாகப் பொருந்தாமல் இருக்கலாம்.