எனது பயணி என்னை பாதுகாப்பின்றி இருப்பதாக உணரச் செய்தார்

பயணிகளின் பேச்சோ செயல்களோ உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பையோ பயணத்தை நிறைவு செய்வதையோ பாதித்தால் அது குறித்து இங்கே தெரிவிக்கவும். அதை ஆய்வு செய்து நாங்கள் தகுந்த நடவடிக்கையை எடுப்போம்.

Uber ஐப் பயன்படுத்தும் அனைவரின் பாதுகாப்பிற்கும் நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம். ஓட்டுநர் என்ற வகையில், பயணியுடன் பயணத்தைத் தொடங்குவதோ நிறைவு செய்வதோ உங்களை ஆபத்தில் ஆழ்த்தகூடும் என்று நீங்கள் ஒருபோதும் உணரக்கூடாது.

பிக்அப் இடத்தில் பயணியைச் சந்திக்கும்போது இவ்வாறு தோன்றினால் இந்தப் பயணத்தைத் துவக்க உங்களுக்கு விருப்பமில்லை என்பதை அவருக்கு விளக்கவும்.

பயணத்தின் போது உங்களுக்கு இவ்வாறு தோன்றினால் உடனடியாகப் பயணத்தை நிறைவு செய்து ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் எனப் பயணியிடம் பணிவோடு விவரிக்கவும்.

பயணி முரட்டுத்தனமாக அல்லது விரும்பத்தகாத முறையில் நடந்துகொண்டு, அதே சமயம் அதனால் யாருடைய பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனில், எனது பயணி மோசமாக நடந்துகொண்டார் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

துணைத் தகவல் மறுப்பு

இந்தத் தகவலைச் சமர்ப்பிப்பதன் மூலம், இது பொருந்தக்கூடிய அனைத்து சட்டத் தேவைகளுக்கும் இணங்க உருவாக்கப்பட்டது மற்றும்/அல்லது பெறப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறேன்.