பெரும்பாலான பயணிகள் எப்போது எங்கே இருக்கின்றனர்?

எப்பொழுது

பெரும்பாலான நகரங்களில் வார இறுதி நாட்களிலும் அவசர நேரங்களிலும் மாலை நேரங்களிலும் பயணங்களுக்கு மிக அதிகத் தேவை ஏற்படுகிறது.

மணிநேரப் போக்குகள் அம்சத்துடன் உங்கள் வாரத்தைத் திட்டமிட உதவ உங்கள் ஓட்டுநர் ஆப்பைப் பயன்படுத்தலாம். உங்கள் நகரம் எப்போது மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கும் ஒரு விளக்கப்படத்தைக் காண கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள்:

  1. உங்கள் ஆப்பின் கீழ் இடது மூலையில் உள்ள அம்புக்குறி ஐகானைத் தட்டவும்.
  2. "மணிநேரப் போக்குகளைக் காட்டு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் ஓட்ட விரும்பும் பகுதியைக் குறிப்பிட "காட்டு" என்பதற்கு அடுத்துள்ள நகரத்தின் பெயரைத் தட்டவும்

மணிநேர விளக்கப்படத்தின் கீழ் ஸ்லைடரை நேரக் கட்டத்துக்கு நகர்த்திய பின்னர் "எனது நாளில் சேர்" என்பதைத் தட்டி குறிப்பிட்ட நேரத்திற்கான ஓட்டுதல் நினைவூட்டல்களை அமைக்கலாம்.

எங்கே

உங்களின் ஓட்டுநர் ஆப்பில் உள்ள வெப்ப வரைபடத்தைப் பயன்படுத்தி உங்கள் நகரத்தின் வெவ்வேறு இடங்களின் வாகனத் தேவைகளை ஒப்பிடுங்கள். குறைவான, அதிகமான, அதிகரித்துக்கொண்டிருக்கும் பயணத் தேவைகளை வரைபடம் வெவ்வேறு வண்ண அடர்த்திகளில் காட்டுகிறது.

நீங்கள் வரைபடத்தை பெரிதாக்கும் போதும் சிறிதாக்கும் போதும், சரஜ் விலை மதிப்பீடுகளைப் மடங்குகளாகக் காண்பீர்கள். எடுத்துக் காட்டாக, நீங்கள் 1.3x, 1.4x அல்லது 2.1x அறுகோணங்களைக் காணலாம்.