மூன்றாம் தரப்பு வழிசெலுத்தல் ஆப்பைப் பயன்படுத்துதல்

ஓட்டுநர் ஆப்பில் உள்ளமைக்கப்பட்ட GPS வழிச்செலுத்தல் உள்ளது, ஆனால் உங்களுக்கு Uber பயணங்களின் போது மூன்றாம் தரப்பு அமைப்புக்களைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தேர்வும் உள்ளது. நீங்கள் பயன்படுத்த விரும்பும் வழிச்செலுத்தல் ஆப்பைத் தேர்வு செய்யுங்கள்.

உங்கள் இயல்புநிலை வழிசெலுத்தல் ஆப்பை அமைக்க:

  1. மேல் இடது புறத்தில் உள்ள மெனு ஐகானைத் (மூன்று கோடுகள்) தட்டவும்.
  2. “கணக்கு” > “ஆப் அமைப்புகள்” > "வழிசெலுத்துதல்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஆப்பை உங்கள் இயல்பு நிலை ஆப்பாகத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் உங்கள் இயல்புநிலை வழிச்செலுத்துதல் ஆப்பாக மூன்றாம் தரப்பு ஆப்பைத் தேர்வு செய்திருந்தால், பயணத்தின் போது வழிசெலுத்துக பொத்தானைத் தட்டும்போது, ஓட்டுநர் ஆப்பிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த வழிச்செலுத்துதல் ஆப்பிற்கு உங்களை நகர்த்தும்.

மூன்றாம் தரப்பு வழிச்செலுத்தல் ஆப்பைப் பயன்படுத்தும் போது, உங்கள் கட்டணம் சரியானது என்பதை உறுதி செய்ய ஓட்டுநர் ஆப் தொடர்ந்து பயண விவரங்களைப் பதிவு செய்யும். ஓட்டுநர் ஆப்பிற்குத் திரும்ப, திரையின் மேற்புறத்தில் உள்ள பேனரைத் தட்டுங்கள்.