விடுபட்ட ரெஃபரல் வெகுமதி

உங்கள் ஆப்பின் சம்பாத்தியம்தாவலில் நீங்கள் பரிந்துரைத்த ஒவ்வொரு நண்பரின் நிலையையும் கண்காணிக்கலாம். உங்கள் குறியீட்டைப் பயன்படுத்தி யார் பதிவு செய்துள்ளார்கள், எத்தனை பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள் என்பதை பார்க்க அழைப்புகள் என்பதைத் தட்டவும்.

ஒரு புதிய டெலிவரி நபர் உங்கள் குறியீட்டை பயன்படுத்தி பதிவு செய்து தேவையான பயணங்களை நிறைவு செய்திருந்தால், மின்னஞ்சல் அல்லது புஷ் தகவல் மூலம் 48 மணி நேரத்திற்குள் உங்களுக்கு அதை அறிவிப்போம்.

வாராந்திர பேமெண்ட் அறிக்கையில் உங்கள் ரெஃபரல் வெகுமதி இதர அல்லது பிற பேமெண்ட் பிரிவில் 1-2 வாரங்களில் தோன்றும்.

உங்கள் நண்பர் பின்வருவனவற்றை நிறைவேற்றாத நிலையில் ரெஃபரல் வெகுமதியைப் பார்க்கமாட்டீர்கள்:

  • உங்கள் கணக்கில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்பு SMS அல்லது மின்னஞ்சலில் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி அவர் பதிவு செய்யவில்லை என்றால்
  • தவறான ரெஃபரல் குறியீட்டை உள்ளிட்டிருந்தால்

நகரத்திற்கு ஏற்ப ரெஃபரல் தொகைகள் மாறுபடக்கூடும் மேலும் அவை பரிந்துரைத்த நபரின் நகரைச் சார்ந்தது. நீங்கள் எதிர்பார்த்ததை விட வேறுபட்ட ரெஃபரல் தொகையைப் பெற்றிருந்தால், பரிந்துரைக்கப்பட்ட நபர் சரியான நகரத்தில் பதிவுசெய்துள்ளாரா என்பதைச் சரிபார்க்கவும்.

ரெஃபரல் சலுகைகள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது மற்றும் சலுகை விதிகள் மாறக் கூடும்.

ரெஃபரல் காணப்படவில்லை என்றாலோ அல்லது சரியானத் தொகை செலுத்தப்படாமல் இருந்தாலோ எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.