இந்தப் பயணத்தைத் தவறான பயணி மேற்கொண்டார்

அவ்வப்போது, உங்கள் வாகனத்தில் தவறுதலாக வேறொரு பயணி ஏற முயற்சிக்கலாம்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் சரியான நபரைப் பிக்அப் செய்வதை உறுதிசெய்ய, பயணத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் பயணியின் பெயரை உறுதிப்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.

நீங்கள் அவர்களின் கோரிக்கையை ஏற்றவுடன் உங்கள் ஆப்பில் பயணியின் பெயர் காட்டப்படும், பயணியும் உங்கள் பெயர், புகைப்படம், கார் வகை, உரிமத் தகட்டு எண் ஆகியவற்றைப் பார்க்க முடியும்.

உங்கள் வாகனத்தில் தவறான பயணியை ஏற்றிக்கொண்டு இந்தப் பயணத்தை நிறைவு செய்தீர்கள் எனில், எங்களுக்கு இங்கே தெரியப்படுத்துங்கள்.