என் வாகனத்தில் ஒரு பயணி அசுத்தம் செய்துவிட்டார்

ஒரு பயணி உங்கள் வாகனத்தில் மிக அவசியமாகச் சுத்தம் வேண்டிய அளவுக்கும் பயணங்களை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையிலும் அசுத்தம் செய்திருந்தால், இங்கே எங்களுக்குத் தெரிவிக்கவும். உங்களுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். சில சந்தர்ப்பங்களில், சுத்தம் செய்வதற்கான செலவை நாங்கள் உங்களுக்கு வழங்கலாம். பயணம் முடிவடைந்த 3 வேலை நாட்களுக்குள், அசுத்தத்தின் புகைப்படத்தைச் சமர்ப்பியுங்கள். பொருந்தினால் நாங்கள் மதிப்பாய்வு செய்து ஒரு நிலையான கட்டணத்தை வழங்குவோம். அசுத்தத்திற்கு காரணமாணவர் என்று தீர்மானிக்கப்பட்ட பயணியிடம் உங்களின் பணக் கோரிக்கையைத் தெரிவித்து அவரிடம் அதற்கான கட்டணம் கிளெய்ம் செய்யப்படும். வழங்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், அல்லது கிளெய்ம்மைப் பயணியுடன் பொருத்த முடியா விட்டால், பணத்தை எங்களால் திருப்பியளிக்க முடியாமல் போகலாம். ஒரு பயணி உங்கள் வாகனத்தைச் சேதப்படுத்தியிருந்தால், உங்கள் வாகனத்தின் சேதத்தைப் பதிவு செய்ய கீழேயுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.