அணுகல்தன்மை இணக்க அறிவிப்பு

மாற்றுத்திறனாளிப் பயணிகளை அழைத்துச் செல்வது குறித்த அனைத்து மாநில, மத்திய மற்றும் உள்ளூர் சட்டங்களுக்கும் இணங்கி நடக்க வேண்டும் என ஓட்டுநர்களிடம் Uber எதிர்பார்க்கிறது. மாற்றுத்திறனாளிப் பயணிகளை ஏற்பது குறித்த சட்டங்களை ஓட்டுநர்கள் மீறினால், அது Uber உடனான தங்கள் ஒப்பந்தத்தை மீறுவதாகும். இதன்படி, வாக்கர்கள், கைத்தடிகள், மடக்கும் சக்கர நாற்காலிகள் அல்லது இதர துணைச் சாதனங்களை உபயோகிக்கும் பயணிகளை அதிகபட்சம் இயன்றவரை ஓட்டுநர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டத்திற்குப் புறம்பான எவ்விதமான பாகுபாடு குறித்த புகார்களையும் Uber சீராய்வு செய்யும் வரை கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான இடமளித்தல் குறித்த சட்டத்தின் மீறல் உறுதிப்படுத்தப்பட்டால் Uber ஆப்பை அணுகுவதிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படலாம்.