நான் ஆன்லைனில் இருக்கும்போது வேறு ஆப்பைப் பயன்படுத்தலாமா அல்லது தனிப்பட்ட அழைப்புகளைப் பெறலாமா?

நீங்கள் ஆன்லைன் சென்று, பயணக் கோரிக்கையை ஏற்பதற்கு முன் வேறொரு ஆப்பிற்குச் சென்றுவிட்டால், கோரிக்கைகளைப் பெற விரும்பவில்லை எனில் ஆஃப்லைன் செல்வதற்கு நினைவூட்டும் பாப்-அப் செய்திகளை 3 நிமிடங்களுக்கு ஒருமுறை பெறுவீர்கள். நீங்கள் பயணத்தில் இருக்கும்போது, ஆப் இந்த பாப்-அப்களை அனுப்பாது.

நீங்கள் வேறு ஆப்களையோ தொலைபேசியையோ பயன்படுத்தும்போது Uber ஆப் தொடர்ந்து இயங்கும். துல்லியமான கட்டணங்களுக்காக உங்கள் பயணங்கள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய GPS தகவல் தொடர்ந்து சேகரிக்கப்படும்.

தொலைபேசி பயன்பாடு தொடர்பான உள்ளூர் விதிமுறைகளைப் பின்பற்றவும். வாகனம் ஓட்டும்போது தொலைபேசியில் பேசுவது கவனத்தைச் சிதறடிப்பதோடு ஆபத்தானதும் கூட என்பதை நினைவில் கொள்ளவும். சில பயணிகள் இதை மோசமான நடத்தையாகவும் பாதுகாப்பின்மையாகவும் கருதுவார்கள்.