ஓர் அவசரகாலத் தொடர்பு என்றால் என்ன?
அவசரகாலத் தொடர்பு என நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபரை, பயணத்தின்போது அவசரநிலை ஏற்பட்டால் Uber உங்களை நேரடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால் அவரைத் தொடர்புகொள்ளலாம்.
Uber அவரை எப்போது அணுகும்?
பயணம் அல்லது டெலிவரியின் போது அவசரநிலை ஏற்பட்டால் முதலில் உங்களை அழைக்க Uber முயற்சிக்கும். எங்களால் உங்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனில், பின்வரும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டால், உங்கள் அவசரகாலத் தொடர்புகளை Uber அழைக்க முயற்சி செய்யலாம்:
-ஒருவர் இறந்துவிட்டார்
-ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
-ஒருவர் ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்
-ஒருவருக்கு வாழ்க்கையை மாற்றும் காயங்கள் ஏற்பட்டன
இரண்டு காரணங்களுக்காக Uber உங்கள் அவசரகாலத் தொடர்பை அழைக்கலாம்:
-அவசரநிலை ஏற்பட்டிருக்கலாம் என்று உங்கள் தொடர்புக்கு அறிவித்தல்
- என்ன நடந்தது, யார் சம்பந்தப்பட்டது என்பன உள்ளிட்ட அவசரகாலத்தை பற்றிய தகவல்களை சேகரித்தல்
அவசரகாலத் தொடர்பாளராக நீங்கள் எந்த எண்ணையும் சேர்க்கலாம், ஆனால் நீங்கள் சமீபத்தில் சேர்த்த இரண்டு தொடர்புகளை மட்டுமே Uber தொடர்பு கொள்ள முயற்சிக்கும்.
Uber இனால் உங்கள் முதலாவது அவசர தொடர்பாளரைத் தொடர்பு கொள்ள முடிந்தால், நாங்கள் இரண்டாவது நபரை அழைக்க மாட்டோம்.
தனியுரிமை என்றால் என்ன?
பயனர் தரவுகளின் தனியுரிமையைப் பாதுகாக்க Uber உறுதி பூண்டுள்ளது. உங்கள் தொடர்புகள் அவசரகாலங்களில் மட்டுமே அழைக்கப்படுவார்கள். நீங்கள் உங்கள் கணக்கிலிருந்து அவசரத் தொடர்பை நீக்கினால், Uber-உம் உடனடியாக அத்தகவலை நீக்கும்.
எனது அவசரகால தொடர்புத் தகவலை எவ்வாறு புதுப்பிப்பது?
ஆப்-இல் உங்கள் அவசரகாலத் தொடர்புகளை எந்த நேரத்திலும் புதுப்பிக்கலாம். ஆப் மெனுவிலிருந்து "கணக்கு" மற்றும் "ஆப் அமைப்புகள்" என்பதற்குச் செல்லவும். தொடர்புகொள்பவரின் விவரங்களில் "அவசரகாலத் தொடர்பு" நிலைமாற்றத்தை மாற்றுவதன் மூலம் ஒருவரை அவசரகாலத் தொடர்பாளராகச் சேர்க்கவும் அல்லது அகற்றவும்.