iOS இல் சாதன அமைப்புகளில் பிழைகளை சரிசெய்தல்

ஓட்டுநர் ஆப் மிகச்சிறந்த அனுபவத்தைத் தருவதற்கு, கைபேசியை இயல்புநிலை ஃபேக்டரி அமைப்பில் வைக்கவும். சில மேம்பட்ட கைபேசி அமைப்புகள் உங்கள் ஆப் சரியாக வேலை செய்யும் திறனை பாதிக்கலாம்.

இந்தச் சிக்கல்களை சரிசெய்ய:

  • உங்கள் மொபைல் சாதனத்தை மேம்படுத்தவும்
  • உங்கள் Uber ஆப்பை புதுப்பிக்கவும்
  • தானியங்கு புதுப்பிப்புகளை இயக்கவும்

பிற பொதுவான பிரச்சினைகள்

  • போலி இருப்பிட அம்சம் இயக்கப்பட்டுள்ளது. உங்கள் சாதன அமைப்புகளில் போலி இருப்பிட அம்சத்தை முடக்கவும் அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஏதேனும் போலி இருப்பிட ஆப்பை முடக்கவும். இவற்றினால் உங்கள் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுவதில் சிரமம் ஏற்பட்டு, உரிய வகையில் Uber ஆப் இயங்குவது தடைபடலாம்.
  • உங்கள் ஆப் அதிகாரப்பூர்வ Uber ஓட்டுநர் ஆப் அல்ல. உங்கள் ஓட்டுநர் ஆப் அதிகாரப்பூர்வ Uber ஓட்டுநர் ஆப் தான் என்பதை உறுதிசெய்யவும்.
  • உங்கள் சாதனம் ரூட் செய்யப்பட்டுள்ளது. இயல்புநிலை ஃபேக்டரி அமைப்புகளை மீட்டமைக்க, சாதனத்தை அன்ரூட் செய்ய வேண்டும். பெரும்பாலான ரூட்டிங் கருவிகளுக்கு அன்ரூட் செய்யும் வழிமுறைகளும் வழங்கப்படுகின்றன, எனவே உங்கள் கைபேசியை அன்ரூட் செய்ய அந்தப் படிகளைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்கிறோம்.
  • உங்கள் சாதனம் கட்டுப்பாடு நீக்கிய அமைப்பில் உள்ளது. கட்டுப்பாடு நீக்கிய அமைப்பை ரத்துசெய்ய, சாதனத்தை மீட்டமைக்க வேண்டும்.