பயணி வைத்துள்ளது ஓர் ஆதரவுப் பிராணியா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

பயணி வைத்துள்ளது ஒரு சேவைப் பிராணியா என்பது உங்களுக்குச் சரியாகத் தெரியாவிட்டால், அவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்கலாம்: 1. ஊனம் காரணமாக இந்தப் பிராணி தேவைப்படுகிறதா? 2. இந்தப் பிராணிக்கு என்ன வேலை அல்லது பணியைச் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது? தான் வைத்துள்ளது ஓர் ஆதரவுப் பிராணி என்று பயணி கூறினால், அல்லது ஊனம் காரணமாக அது தனக்குத் தேவைப்படுவதில்லை என்றோ ஊனம் தொடர்பான உதவிக்கு அது பயிற்சி அளிக்கப்படவில்லை என்றோ அவர் கூறினால், பயணத்தை ஏற்று நிறைவுசெய்வது அல்லது மறுப்பது உங்கள் சுய முடிவைப் பொறுத்தது.