2016 தரவுப் பாதுகாப்பு நிகழ்வு குறித்த தகவல்கள்

2016 அக்டோபர், Uber ஒரு தகவல் பாதுகாப்பு நிகழ்வை எதிர்கொண்டது, இதன் விளைவாக பயணி மற்றும் ஓட்டுநர் கணக்குகள் தொடர்பான தகவல்கள் பாதுகாப்பை மீறி அணுகப்பட்டன.

ஓட்டுநர் தகவல்களில் உலகளாவிய கணக்குகள் தொடர்பான பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், கைப்பேசி எண்கள் ஆகியவை அடங்கின. கூடுதலாக, ஐக்கிய அமெரிக்காவில் சுமார் 600,000 ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிம எண்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டன. பயண இட வரலாறு, கிரெடிட் கார்டு எண்கள், வங்கி கணக்கு எண்கள் சமூகப் பாதுகாப்பு எண்கள் அல்லது பிறந்த தேதிகள் ஆகியவை பதிவிறக்கம் செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறிகளையும் எங்கள் வெளிப்புறத் தடயவியல் நிபுணர்கள் காணவில்லை.

இது நடந்த போது, தரவைப் பாதுகாக்கவும், அங்கீகரிக்கப்படாத அணுகல் தொடராதவாறு நிறுத்தவும், எங்கள் தரவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தோம்.

நாம் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் நாங்கள் நேரடியாக அறிவித்து வருகிறோம், அவர்களுக்கு இலவசமாக கிரெடிட் கண்காணிப்பையும் அடையாள திருட்டில் இருந்து பாதுகாப்பையும் வழங்குகிறோம்.

2016 நவம்பர் இல் நடந்த இந்த நிகழ்வைப் பற்றி நாங்கள் அறிந்த போது, தீங்கைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் நடவடிக்கை எடுத்தோம், ஆனால் ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்கவில்லை. இது தவறு என்று நாங்கள் நினைக்கிறோம், அதனாலேயே இப்போது நாங்கள் விவரித்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த நிகழ்வில் மோசடி அல்லது முறைகேடு தொடர்பான எந்த ஆதாரத்தையும் நாங்கள் கண்டறியவில்லை.