2016 தரவுப் பாதுகாப்பு நிகழ்வு குறித்த தகவல்கள்

2016 அக்டோபரில், பயணி மற்றும் ஓட்டுநர் கணக்குகள் தொடர்பான தகவல்கள் அத்துமீறி அணுகப்பட்ட ஒரு தரவுப் பாதுகாப்பு நிகழ்வை Uber சந்தித்தது.

ஓட்டுநர்கள் விஷயத்தில், இந்தத் தகவலில் உலகளவிலான கணக்குகள் தொடர்பான பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் தொலைபேசி எண்கள் அடங்கியிருந்தன. மேலும், அமெரிக்காவில் உள்ள சுமார் 600,000 ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிம எண்கள் பதிவிறக்கப்பட்டன. எனினும், பயண இட வரலாறு, கிரெடிட் கார்டு எண்கள், வங்கிக் கணக்கு எண்கள் அல்லது பிறந்த தேதிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் எங்கள் வெளியார் தடயவியல் நிபுணர்கள் கண்டறியவில்லை.

அமெரிக்காவில் இந்தச் சம்பவத்தில் சுமார் 25.6 மில்லியன் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் தகவல்கள் சம்பந்தப்பட்டிருந்தன. இவை துல்லியமான மற்றும் திட்டவட்டமான எண்ணிக்கைகள் அல்ல, ஒரு சுமாரான கணக்கு தான், ஏனென்றால் சில சமயங்களில் ஒரு நாட்டின் குறியீட்டை ஒதுக்கப் பயன்படுத்தும் ஆப் அல்லது எங்கள் வலைத்தளம் மூலம் நாங்கள் பெறும் தகவல்கள் அந்த நபர் வசிக்கும் அதே நாட்டைக் குறிப்பதாக இருக்காது.

இது நடந்த போது, நாங்கள் தரவைப் பாதுகாப்பதற்கும், மேற்கொண்டு அங்கீகாரமற்ற அணுகலைத் தடுப்பதற்கும், எங்கள் தரவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தோம்.

பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் நேரடியாக இதைத் தெரிவித்து வருகிறோம், மேலும் அவர்களுக்கு இலவச கிரெடிட் கண்காணிப்பும் அடையாளத் திருட்டுப் பாதுகாப்பும் வழங்குகிறோம்.

2016 நவம்பரில் இந்த நிகழ்வு பற்றி நாங்கள் அறிந்தபோது, பாதிப்பைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் நடவடிக்கை எடுத்தோம், ஆனால் ஓட்டுநர்களுக்கு அதைத் தெரிவிக்கவில்லை. அந்த அணுகுமுறை சரியல்ல என்பதை உணர்ந்த நாங்கள், இந்த முறை மேற்படி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த நிகழ்வு சம்பந்தமாக மோசடியோ துஷ்பிரயோகமோ ஏற்பட்டதற்கான எவ்வொரு ஆதாரமும் இருக்கவில்லை.

பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு இதுபற்றி அறிவிப்புகளை அனுப்பிக் கொண்டு இருக்கிறோம், எனினும் பதிவிறக்கப்பட்ட ஓட்டுநர் உரிம எண்களில் உங்கள் கணக்கும் அடங்கியுள்ளதா எனத் தெரிந்துகொள்ள நீங்கள் கீழே உள்ள விவரத்தில் தொடர்புகொள்ளலாம்.