தரமதிப்பீடுகளை மேம்படுத்துவது எப்படி?

பயணத்தின் போது எதிர்பாராத சில நிகழ்வுகள் ஏற்படலாம். உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் பயணியிடமிருந்து நீங்கள் பெறும் தரமதிப்பீட்டைப் பாதிக்கலாம்.

இது கவலையை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனினும், உங்கள் ஒட்டுமொத்தத் தரமதிப்பீடு அதிகபட்சமாக உங்களது கடைசி 500 பயணங்களின் சராசரியை பொறுத்து அமைகிறது என்பதால், ஒரு குறிப்பட்ட பயணத்துக்கான தரமதிப்பீடு உங்கள் ஒட்டுமொத்தத் தரமதிப்பீட்டை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்காது.

மேலும், ஒரு பயணி பாதகமான தரமதிப்பீட்டை வழங்கி, அதற்கு உங்கள் செயல்திறன் சாராத ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுத்தால் (எ.கா. அளவுக்கதிகமான பிக்அப்கள், விலை, ஆப் போன்றவை), அந்தப் பயணம் உங்கள் ஒட்டுமொத்தத் தரமதிப்பீட்டில் சேர்க்கப்படாது.

5 நட்சத்திர ஓட்டுநர்கள் வழங்கும் உதவிக்குறிப்புகள்

பயணிகள் பின்வரும் சூழ்நிலைகளில் தங்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதாக ஐந்து நட்சத்திர ஓட்டுநர்கள் கூறுகின்றனர்:

  • வாகனங்களைச் சுத்தமாக பராமரித்து அதற்குள் நறுமணங்கள் ஏதுமின்றி வைத்திருப்பது
  • சேருமிடத்துக்குச் செல்ல எந்த வழியை விரும்புகிறார்கள் எனப் பயணிகளிடம் கேட்பது
  • கனிவாகவும் தொழில்நெறியோடும் மரியாதையாகவும் பேசுவது
  • உடை அணிவதில் தொழில்நெறி பேணுவது
  • பயணிகளுக்கு வாகனக் கதவைத் திறந்துவிடுவது
  • தண்ணீர் பாட்டில்கள், சிறு தின்பண்டங்கள், சுவிங்கம், மிண்ட் மிட்டாய், செல்போன் சார்ஜர் போன்றவற்றை வழங்குவது
  • பயணச் சாமான்கள் மற்றும் பைகளை எடுத்து வைக்க உதவுவது, அதில் பிரச்சனை ஏதும் இல்லையென்றால்

உங்களுக்கான வாராந்திர மதிப்பாய்வில், பயணிகளின் தரமதிப்பீடுகளும் கருத்துகளும் பகிர்ந்து கொள்ளப்படும். இதன் மூலம், நீங்கள் வழங்குகிற பயண அனுபவங்கள் குறித்து நுணுக்கமாகப் புரிந்துகொள்ள முடியும்.