எனது ஆவணங்கள் எப்போது ஏற்றுக்கொள்ளப்படும்?

பதிவேற்றப்பட்ட ஆவணங்களை மதிப்பாய்வு செய்ய பொதுவாக 1-5 நாட்கள் ஆகும். விண்ணப்பச் செயல்முறையைச் சீராக்க, ஆவணங்களைப் பதிவேற்றும்போது இந்த உதவிக்குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள்:

  • அனைத்து ஆவணங்களும் புதுப்பித்த நிலையில் இருக்கின்றன, மேலும் அவை காலாவதியாகவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். காலாவதியான ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டு, அதை நீங்கள் மீண்டும் சமர்ப்பிக்கும்போது உங்கள் காத்திருப்பு நேரம் அதிகமாகும்.
  • உங்கள் வாகனத்தின் காப்பீட்டுக்கான ஆதாரத்திலும் ஓட்டுநர் உரிம ஆவணங்களிலும் உங்கள் பெயர் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். இந்த ஆவணங்களில் உள்ள உங்கள் பெயர் உங்கள் Uber கணக்கில் பதிவு செய்யப் பயன்படுத்திய பெயருடன் பொருந்த வேண்டும்.
  • பதிவேற்றிய படங்கள் தெளிவாகவும் சரியாகவும் இருப்பதை உறுதிசெய்யவும். ஆவணங்களைப் படம் எடுக்கும்போது கேமராவின் ஃபிளாஷைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். கண்களைக் கூசச் செய்யும் ஃபிளாஷ் வெளிச்சம் தேவையான தகவல்களை மறைக்கக்கூடியதாக இருக்கலாம்.
  • பதிவேற்றிய புகைப்படங்களில் உங்கள் ஆவணங்களின் 4 மூலைகளும் தெரிவதைச் சரிபார்க்கவும்.