உங்கள் Uber கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்

ஃபிஷிங் என்றால் என்ன?

ஃபிஷிங் என்பது உங்களை ஏமாற்றி உங்கள் கணக்குத் தகவல்களை (மின்னஞ்சல், தொலைபேசி எண் மற்றும்/அல்லது கடவுச்சொல்) பெறுவதற்கான முயற்சி.

ஃபிஷிங் முயற்சி வெற்றி பெற்றால், அது அடையாளத் திருட்டு மற்றும் நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.

ஃபிஷிங் ஒரு வேண்டப்படாத அழைப்பாக நிகழலாம், அந்த அழைப்பில் பேசுபவர் உங்கள் கணக்குத் தகவலைக் கேட்பார். இது குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வழியாகவும் நிகழலாம், அதில் ஒரு போலி உள்நுழைவுப் பக்கத்திற்கு வழிவகுக்கும் இணைப்பு அல்லது லின்க் இருக்கக்கூடும்.

பொதுவான ஃபிஷிங் மோசடிகள்

  • உங்கள் கடவுச்சொல் மற்றும் கணக்குத் தகவலைக் கேட்பதற்காக போலியான "Uber உதவி மைய" அழைப்பு அல்லது குறுஞ்செய்தி வரலாம்
  • தனிப்பட்ட தகவல்களுக்கு ஈடாக Uber கிரெடிட்டுகள் வழங்கப்படலாம்
  • கணக்குத் தகவலைக் கேட்கும் வேண்டப்படாத அழைப்புகள், அல்லது போலி உள்நுழைவுப் பக்கங்களுக்கு வழிவகுக்கும் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் இணைப்புகள் வரலாம்.
  • சலுகைவிலைத் தயாரிப்புகளை விற்கும் இணையதளங்கள் உங்கள் Uber கணக்கு உள்நுழைவு விவரத்தைக் கேட்கலாம்
  • உங்கள் கணக்கில் எரிவாயுப் பரிசு அட்டையைச் சேர்க்கும்படி கேட்கும் மின்னஞ்சல்கள் அல்லது அழைப்புகள் வரலாம், இது உங்கள் சம்பாத்தியத்தை போலி டெபிட் கார்டுகளுக்கு கேஷ் அவுட் செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது

உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி

எக்காரணத்துக்காகவும் உங்கள் கடவுச்சொல்லை பிறருடன் பகிர்வதைத் தவிர்த்தால், உங்கள் Uber கணக்கை ஃபிஷிங்கிலிருந்து பாதுகாக்கலாம். நாங்கள் ஒருபோதும் உங்கள் கடவுச்சொல், SMS குறியீடு, வங்கித் தகவல் அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு தகவல்களை தொலைபேசி மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ கேட்க மாட்டோம்.

ஃபிஷிங் வலைத்தளங்கள் அச்சு அசலாக Uber இன் சட்டபூர்வமான வலைத்தளங்களைப் போலவே இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன, அவற்றில் Uber போலவே தோன்றும் போலி உள்நுழைவுத் தளங்கள் இருக்கலாம். எனவே, உங்கள் பிரவுசரின் முகவரிப் பட்டியில் உள்ள URL https://uber.com அல்லது https://auth.uber.com/ என இருப்பதை உறுதிசெய்துவிட்டு, பிறகு உங்கள் Uber கடவுச்சொல்லை எவ்வொரு வலைத்தளத்திலும் உள்ளிடுவது சிறந்த பழக்கம்.

உங்கள் கணக்கைப் பாதுகாக்க உதவும் 3 வழிகள்

  • ஒருபோதும் கடவுச்சொற்கள், பெறப்பட்ட குறியீடுகள் அல்லது உங்கள் சமூகப் பாதுகாப்பு எண்ணை மின்னஞ்சலிலோ உள்வரும் தொலைபேசி அழைப்புகளிலோ பகிர வேண்டாம்.
  • போலி Uber வலைத்தளங்களைத் தவிர்க்கவும். உண்மையான Uber வலைத்தளங்களின் URL இல் எப்போதும் "uber.com" அடங்கியிருக்கும்.
  • நீங்கள் ஒரு பயணத்தில் உள்ளபோது பயணிகள் உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தவோ அணுகவோ அனுமதிக்காதீர்.