எனது தொலைபேசி சார்ஜ் ஆகவில்லை

உங்கள் கைபேசியின் பேட்டரி சார்ஜ் ஆகவில்லை அல்லது உங்கள் வாகனத்தில் செருகப்பட்டிருக்கும் போது சார்ஜை இழக்கிறது என்றால், பின்வரும் தீர்வுகளை முயற்சிக்கவும்.

சாக்கெட் கார் சார்ஜருக்கு மாறுதல்

பல கார்களில் உள்ள USB போர்ட்டுகள் ஒரு சிறிய அளவு ஆற்றலை மட்டுமே வழங்குகின்றன. பெரும்பாலான புதிய மொபைல்கள் Quick Charge 3.0 போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பங்களை ஆதரிக்கின்றன, மேலும் உங்கள் கைபேசியில் அதே வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் பவர் சாக்கெட் கார் சார்ஜருடன் (சிகரெட் லைட்டர் சார்ஜர் என்றும் அழைக்கப்படும்) சிறந்த முறையில் இணைந்து செயல்படுகின்றன.

உங்கள் குறிப்பிட்ட கைபேசி மாதிரிக்காக வடிவமைக்கப்பட்ட அதிவேகக் கார் சார்ஜரை ஆன்லைனில் தேடி, நல்ல மதிப்புரைகளுடன் கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

திரையின் பிரகாசத்தைக் குறைத்தல்

உங்கள் திரை எவ்வளவு பிரகாசமாக இருக்கிறதோ, அவ்வளவு பேட்டரியை உங்கள் மொபைல் பயன்படுத்துகிறது. நீங்கள் ஓட்டுநர் ஆப்பைப் பயன்படுத்தும் போது உங்கள் கைபேசியைத் தெளிவாகக் காணும் அளவிற்கு திரையின் பிரகாசத்தை மங்கலாக்க முயலுங்கள்.

புதிய கேபிளைப் பெறுதல்

மேலே உள்ள தீர்வுகள் உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய உதவவில்லை என்றால், நீங்கள் ஒரு புதிய சார்ஜிங் கேபிளை வாங்க வேண்டியிருக்கலாம். திடமான, அடர்த்தியான வயரிங் கொண்ட ஒன்றை வாங்கும்படி பரிந்துரைக்கிறோம்.

கையடக்க பவர் பேங்க்கைப் பயன்படுத்துதல்

கையடக்க பவர் பேங்க் உங்கள் வாகனத்திலிருந்து விலகி இருக்கும் போது கைபேசியை சார்ஜ் செய்ய உங்களுக்கு உதவுகிறது, எனவே உங்களுக்குத் தேவைப்படும் போது அது சார்ஜ் செய்யப்படுகிறது.

USB அடாப்டர்களை அகற்றுதல்

சார்ஜிங் கேபிளை உங்கள் கைபேசியுடன் எந்த வகையான அடாப்டரைப் பயன்படுத்தி இணைத்தாலும் சார்ஜிங் வேகம் குறையும். எடுத்துக்காட்டாக, USB-C அடாப்டருடன் கூடிய மைக்ரோ USB கார்டு, USB-C கார்டை விட மெதுவாக சார்ஜ் செய்யக்கூடும் (குறிப்பாக இது குறைந்த தரமுடைய அடாப்டராக இருந்தால்.)

உங்கள் சார்ஜிங் கேபிளைச் சரிபார்த்தல்

அனைத்து USB போர்ட் சார்ஜிங் கேபிள்களும் ஒரே மாதிரியாக வேலை செய்வதில்லை. ஃபாஸ்ட் சார்ஜிங் கேபிள்கள் கூட வெவ்வேறு சாதனங்களை எவ்வளவு விரைவாக சார்ஜ் செய்கின்றன என்பது உற்பத்தியாளரைப் பொறுத்து மாறுபடும், அதாவது சில அதிவேக சார்ஜிங் கேபிள்கள் மற்ற கேபிள்களைப் போல் வேலை செய்யாது.

விரைவாகச் சார்ஜ் செய்வதை உறுதிப்படுத்த, உங்கள் கைபேசியின் உற்பத்தியாளரிடமிருந்து அல்லது அவர்களால் வடிவமைக்கப்பட்ட அதிவேக சார்ஜிங் கேபிளை வாங்கும்படி பரிந்துரைக்கிறோம்.

பயன்படுத்தப்படாத ஆப்களை மூடுதல்

உங்கள் கைபேசி சார்ஜ் ஆகும்போது, பின்னணிப் பணிகளுக்கும் உங்கள் மொபைலில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆப்களுக்கும் சிறிது ஆற்றல் செல்கிறது. உங்கள் கைபேசியை வேகமாகச் சார்ஜ் செய்ய நீங்கள் பயன்படுத்தாத ஆப்களைக் கட்டாயமாக நிறுத்தவும்.