UberX Share தற்காலிகமாகக் கிடைக்கவில்லை

உங்களையும், உங்கள் பயணிகளையும், நமது சமூகத்தையும் பாதுகாக்கும் எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 3/16 முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் UberX Share தயாரிப்பை நிறுத்தி வைக்கிறோம். தொற்றுநோயியல் நிபுணர், பொதுச் சுகாதார அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுடன் கலந்து பேசியபோது கிடைத்த வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது UberX மற்றும் Uber Eats இல் டெலிவரிகள் உட்பட மற்ற அனைத்து வகையான Uber தயாரிப்புகளும் இன்னும் கிடைக்கின்றன. இந்தச் சவாலான நேரத்தில், தொடர்ந்து வாகனம் ஓட்டுவதற்கான உங்கள் விருப்பம் சமூகத்திற்கு ஆதரவளிக்க உதவுகிறது என்பதைப் பயணிகளுக்கு நினைவூட்டுகிறோம். உங்கள் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு, பயணிக்கும் தேவையைக் கொண்ட பயணிகளிடம் நாங்கள் இவற்றைச் செய்யுமாறு கேட்கிறோம்: -உங்கள் காரில் நுழைவதற்கு முன்பும் பிறகும் அவர்களின் கைகளைக் கழுவ வேண்டும் -பின் இருக்கையில் அமர்ந்துகொள்வதன் மூலம் உங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் -அவர்கள் இருமினால் அல்லது தும்மினால் அவர்களின் வாய் அல்லது மூக்கை மூட வேண்டும் -காற்றோட்டத்தை அதிகப்படுத்த ஜன்னலை திறந்து வைத்திருப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் உங்கள் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். Uber ஆப்பைப் பயன்படுத்தி பயணம் செய்பவர்களையும் வாகனம் ஓட்டுபவர்களையும் பாதுகாப்பதற்கு எங்களால் முடிந்தவற்றைச் செய்வதற்குத் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்போம்.