எனக்கு எங்கே, எப்போது அதிக டெலிவரி கோரிக்கைகள் கிடைக்கும்?

டெலிவரி கோரிக்கைகளுக்கு பொதுவாக அதிக தேவை உள்ள நேரங்கள்:

  • உணவு நேரங்கள். உணவு டெலிவரிக்கான அதிகபட்சத் தேவை இருக்கும் நேரம், மதிய உணவு நேரம் (காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை) மற்றும் இரவு உணவு நேரம் (மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை).
  • மழை பெய்யும் நேரங்கள். சாலைகள் வழுவழுப்பாக இருக்கும்போது பாதுகாப்பாக இருந்திடுங்கள்!
  • அதிக மெர்ச்சன்ட்களை கொண்ட இடங்கள், பொதுவாக நகரப் பகுதிகளாக இருக்கும். ஓட்டுநர் ஆப்பில் நீங்கள் உள்நுழையும்போது பரபரப்பான பகுதிகள் அதிக பூஸ்ட் மடங்குகளுடன் குறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

நீங்கள் ஆப், மின்னஞ்சல் மற்றும் / அல்லது உரைச் செய்திகள் மூலம் அதிக தேவை உள்ள பகுதிகள், ஊக்கத் தொகைகள், வேலை நேரங்கள், வேலைப்பளுவான உணவகங்கள் போன்றவற்றைப் பற்றி Uber இடம் இருந்து அவ்வப்போது தகவல்களைப் பெறுவீர்கள்.