பெண் என்றோ ஆண்/பெண் அல்லாதவர்கள் என்றோ அடையாளம் காணப்படும் ஓட்டுநர்கள், பெண் பயணிகளை மட்டும் பிக்அப் செய்வதற்கு, பெண் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வசதி வழிவகுக்கிறது.
இந்த முன்னுரிமை விருப்பத்தை அமைக்க:
1. Uber ஆப்பைத் திறக்கவும்.
2. திரையின் கீழ் வலதுபுறத்தில் உள்ள 3 கிடைமட்டக் கோடுகளைத் தட்டவும். இது "பயணத் திட்டமிடுதலைத்" திறக்கும்.
3. கீழ் வலது மூலையில் உள்ள முன்னுரிமைகள் ஐகானைத் தட்டவும். இது உங்கள் ஓட்டுதல் முன்னுரிமைகளைத் திறக்கும்.
4. "பெண் பயணிகள் முன்னுரிமை" விருப்பத்தை இயக்க அல்லது முடக்க "பெண் பயணிகள்" நிலைமாற்றியைத் தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பு: இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் போது நீங்கள் குறைவான பயணங்களைப் பெறக்கூடும், இது உங்கள் சம்பாத்தியத்தைப் பாதிக்கக்கூடும்.
இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் போது உங்களுக்கு நியமிக்கப்படும் பயணிகள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் என்றோ ஒரு பெண் போன்று நீங்கள் அடையாளம் காணும் வகையில் தோற்றமளிப்பார்கள் என்றோ Uber ஆல் உத்தரவாதம் அளிக்க முடியாது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் போது, ஆண் பயணி என்று நீங்கள் நம்பும் ஒருவர் உங்களுக்குப் பயணியாக நியமிக்கப்பட்டால், பயணத்தை ரத்துசெய்துவிட்டு, "நான் பெண் பயணிகளுடன் பயணங்களைத் தேர்ந்தெடுத்தேன்" என்பதைத் தேர்வுசெய்யலாம். பிரச்சனையை Uber -க்குத் தெரியப்படுத்த இது உதவுகிறது. பிக்-அப் செய்யும் இடத்தில் இருந்து நீங்கள் ரத்துசெய்தால், இது உங்கள் ரத்துசெய்தல் விகிதத்தில் கணக்கிடப்படாது மேலும் ரத்துசெய்ததற்காக உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது. பயணக் கோரிக்கையை ஒரு பெண் செய்து, அவரும் பயணம் செய்யும் பட்சத்தில் தன்னுடன் ஆண்களை அழைத்து வரலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
Uber சமூகம் என்பது, அனைத்துப் பாலின அடையாளங்கள் மற்றும் எண்ண வெளிப்பாடுகளைக் கொண்டவர்கள் உட்பட, குறிப்பிடத்தக்க வகையில் பல்வேறு தரப்பினரைக் கொண்டது என்பதைக் கருத்தில் கொள்ளவும். சில பெண் பயணிகள், தங்கள் பாலினத்தை வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடும் அல்லது "பெண்மையை" பற்றிய உங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு தோற்றமளிக்காமல் இருக்கக்கூடும்
‘பெண் பயணிகள் முன்னுரிமை’ விருப்பத்தை அணுக, ஆப்பில் உங்களது சமீபத்திய பாலினப் புதுப்பிப்பு, உங்கள் அடையாளத்தின் துல்லியமான பிரதிநிதித்துவம் என்பதை உறுதிப்படுத்தி, நீங்கள் ஒரு படிவத்தில் கையொப்பமிட வேண்டும்.
படிவத்தில் கையொப்பமிட்ட பிறகு, இது நிறைவடைந்ததை எங்களுக்குத் தெரிவிப்பதற்காக, Uber ஆதரவு மையத்திலிருந்து பெற்ற செய்திக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். செய்திக்கு "எனது பாலின அடையாளத்தைப் புதுப்பித்துள்ளேன்" எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், ஆதரவுக் குழு உங்கள் சமர்ப்பிப்பை மதிப்பாய்வு செய்யும்.