அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Uber Bus என்றால் என்ன?

Uber Bus என்பது சௌகரியமான, பாதுகாப்பான மற்றும் வசதியான கம்யூட் பயணத்தைப் பெறுவதற்கான ஒரு புதிய வழியாகும்.

சுத்தமான, குளிரூட்டப்பட்ட மற்றும் உயர்தரப் பேருந்தில் உங்கள் இருக்கையை முன் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை Uber Bus பயன்படுத்துகிறது. ஆப்பின் மூலம் உங்கள் பயணத்தை நீங்கள் கோரும்போது, நீங்கள் முன்பதிவு செய்யக்கூடிய நேரத்தைக் காண்பீர்கள், மேலும் உங்கள் வாரத்தை முன் கூட்டியே திட்டமிடலாம். நீங்கள் மற்ற Uber பயணிகளுடன் பயணங்களைப் பகிர்வதால், அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற விலையில் உள்ளது.

இது எங்கெல்லாம் கிடைக்கிறது?

தற்போது, எகிப்து மற்றும் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே Uber Bus கிடைக்கிறது.

ஒரு பயணத்திற்கான கட்டணம் என்ன?

பயண தூரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணங்கள் நகரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

Uber Bus இல் நான் எப்படி பயணம் செய்வது?

  1. புதுப்பித்தல்: Uber ஆப்பின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

  2. கோரிக்கை: நீங்கள் சேருமிடத்தை உள்ளிட்டு, Uber Bus விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கட்டணத்தை மதிப்பாய்வு செய்து, உங்களுக்கு விருப்பமான பிக்அப் நேரத்தைத் தேர்ந்தெடுத்து, இருக்கைகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து, "கோரிக்கை" என்பதைத் தட்டவும்.

  3. பயண விவரங்கள்: உங்கள் பயண விவரங்களைப் பார்க்க, சில நிமிடங்கள் காத்திருக்கவும். ஓட்டுநர் தகவல் மற்றும் பிக்கப் இடத்தைப் பார்ப்பீர்கள். இந்த நேரத்தில், உங்கள் இருக்கை முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்து உங்கள் பிக்கப் இடத்திற்கு வந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்காணிக்கலாம்.

  4. நடக்கவும்: வரை படத்தில் நீங்கள் பார்க்கும் இடத்துக்கு நடக்கவும். பஸ் வருவதற்கு முன் வந்து விடுவதை உறுதி செய்யுங்கள். பிக் அப் இடத்தில் பஸ் 2 நிமிடங்கள் மட்டுமே காத்திருக்கும்

  5. பயணம்: உங்கள் ஓட்டுநரிடம் உங்கள் டிக்கெட்டைக் காட்டி, அவரிடம் பணமாகவோ அல்லது ஆப்பின் மூலமாகவோ தொகையைச் செலுத்தி உங்கள் பயணத்தை அனுபவிக்கவும்.

  6. சேருமிடத்தை நோக்கி நடக்கவும்: நீங்கள் உங்கள் சேருமிடத்தை நெருங்கியதும், நீங்கள் செல்ல வேண்டிய வழியின் அடிப்படையில் உங்கள் இறுதி சேருமிடம்க்கு மிக அருகில் உள்ள இறங்குமிடத்தைக் கண்டுபிடிப்போம். நீங்கள் இறுதியாகச் சென்று சேரவேண்டிய இடத்திற்கு நடந்து செல்வதற்கான வழிகளை ஆப்பில் காணலாம்.

Uber Bus ஆப்பைப் பயன்படுத்தியும் பயணத்தைக் கோரலாம். Uber Bus ஆப் அனைத்து android சாதனங்களிலும் அனைத்து நெட்வொர்க் நிலைமைகளிலும் வேலை செய்கிறது.

நான் முன்கூட்டியே முன் பதிவு செய்யலாமா?

கோரப்பட்ட நேரம் மற்றும் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே நீங்கள் முன்பதிவு செய்யலாம். வாரம் முழுவதும் ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்துகளில் முன் பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

மாவட்டத்தைத் தவிர மற்ற பகுதிகளில் வாகனத்தை ஏன் என்னால் பார்க்க முடியவில்லை?

நீங்கள் வழித்தடத்திற்கு அருகாமையில் இல்லாவிட்டால் வாகனத்தைப் பார்க்க முடியாது. மற்ற மாவட்டங்களில் வழிகள் செயல்படுத்தப் பட்டதால், நீங்கள் காட்சியைப் பார்க்கத் தொடங்குவீர்கள்.

எனது நகரத்தில் எங்கிருந்தும் என்னால் பேருந்தை ஆர்டர் செய்ய முடியுமா?

இல்லை. நாங்கள் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே சேவையளிக்கிறோம். எனவே உங்கள் பிக்அப் மற்றும் டிராப் ஆஃப் இடங்கள் அந்தப் பகுதிகளுக்கு அருகில் இருக்க வேண்டும்.

நான் ஒரு நண்பருடன் பயணம் செய்யலாமா?

ஆம், நீங்கள் பல நபர்களுக்கு பயணம் செய்யக் கோரலாம்.

பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை என்ன?

பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 3.

COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

சுகாதார முன்னெச்சரிக்கைகள் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுகிறோம்.