ஓட்டுநருக்குத் தரமதிப்பிடுதல்

பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகிய இருவருக்கும் ஒரு மிகச்சிறந்த அனுபவத்தை உறுதிசெய்வதற்குத் தரமதிப்பீடுகள் எங்களுக்கு உதவுகின்றன. தரமதிப்பீடுகளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். எங்கள் சமூக வழிகாட்டுதல்களுக்கு இணங்க, குறைந்த தரமதிப்பீடுகளைக் கொண்ட ஓட்டுநர்கள் Uber தளத்திற்கான அணுகலை இழக்கக்கூடும்.

உங்கள் ஓட்டுநருக்குத் தரமதிப்பிடுதல்

ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும், உங்கள் ஓட்டுநருக்கு 1 முதல் 5 நட்சத்திரங்கள் வரை உங்களால் தரமதிப்பிட முடியும். இந்தத் தரமதிப்பீட்டை உங்கள் ரசீதின் கீழேயும் வழங்கலாம்.

குறிப்பிட்ட ஓட்டுநரால் வழங்கப்பட்டதாக நீங்கள் நினைக்கும் சேவையின் தரத்தை உங்கள் மதிப்பீடு பிரதிபலிக்க வேண்டும். நீங்கள் வழங்கும் குறிப்பிட்ட மதிப்பீட்டை அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

உங்கள் ஓட்டுனருக்கான தரமதிப்பீட்டைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உள்ளதா? இங்கே சில குறிப்புகள் உள்ளன:

  • 5 நட்சத்திரங்கள்: பயணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அர்த்தம்
  • 1 நட்சத்திரம்: பயணத்தில் கடுமையான சிக்கல் ஏற்பட்டது என்று பொதுவாக அர்த்தம்

பின்னூட்டங்களை வழங்குதல்

5 ஐ விடக் குறைவான தரமதிப்பீட்டை நீங்கள் தேர்ந்தெடுத்தால், என்ன மேம்படுத்தலாம் என்பது குறித்து உங்கள் ஓட்டுநருக்கு அநாமதேய பின்னூட்டத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்வோம். 5 க்குக் குறைவான தரமதிப்பீட்டைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் மற்றவை என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஓட்டுநரின் ஒட்டுமொத்த நட்சத்திர மதிப்பீட்டைப் புரிந்துகொள்வது

பொதுவாக, உங்கள் மதிப்பீடு ஓட்டுநரின் ஒட்டுமொத்த நட்சத்திர மதிப்பீட்டில் காரணியாக இருக்கும், இது அவர்கள் கடந்த 500 நிறைவு செய்த பயணங்களின் சராசரி மதிப்பாகும். சில சமயங்களில், ஓட்டுநரின் சேவையின் தரத்தைப் பிரதிபலிக்காதபோது ஓட்டுநரின் சராசரி மதிப்பிலிருந்து குறைந்த மதிப்பீட்டை நாங்கள் விலக்கக்கூடும். போக்குவரத்து போன்ற ஓட்டுநரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளின் அடிப்படையில் தரமதிப்பீடு பெறப்படும்போது அல்லது அடிக்கடி குறைந்த தரமதிப்பீடுகளை வழங்கும் பயணியிடமிருந்து வரும்போது இது நிகழ்கிறது. ஓட்டுநர்கள் வழங்கும் சேவைகளில் அவர்கள் நியாயமான முறையில் மதிப்பிடப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் இதைச் செய்கிறோம்.