வணிகங்களிடம் கிடைக்கும் வவுச்சர்களைப் பயன்படுத்துதல்

சில தேவைகளைப் பூர்த்தி செய்யும் பயணங்களுக்கு அல்லது Uber Eats ஆர்டர்களுக்கு கிரெடிட் வழங்க வணிகங்கள் வவுச்சர்களை வழங்கலாம். ஆப்பானது உங்கள் வவுச்சரை பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாமா அல்லது பயணங்களுக்கும் ஆர்டர்களுக்கும் பயன்படுத்தலாமா என்பதைத் தெரிவிக்கும்.

நீங்கள் Uber for Business ஐப் பயன்படுத்தும் நிர்வாகி அல்லது ஒருங்கிணைப்பாளரா? Uber for Business உதவி மையத்தில் வவுச்சர்களை நிர்வகிக்க உதவியைப் பெறுங்கள்.

ஒரு வவுச்சரை ரிடீம் செய்தல்

  1. Uber ஆப்பில் உள்நுழையவும் அல்லது uber.com தளத்தில் கணக்கை உருவாக்கவும்.
  2. வவுச்சரைக் கோர உங்கள் மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. வவுச்சர் உங்கள் கணக்கில் தானாகச் சேர்க்கப்படுவதுடன் உங்களின் அடுத்த தகுதி பெறும் பயணம் அல்லது ஆர்டருக்குப் பயன்படுத்தப்படும்.

உங்கள் தனிப்பட்ட சுயவிவரத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வணிகச் சுயவிவரத்தில் வவுச்சர்கள் வேலை செய்யாது.

குறிப்பு: பயண அல்லது ஆர்டர் விலைக்கு மட்டுமே வவுச்சர் செல்லுபடியாகும். உங்கள் ஓட்டுநருக்கான வெகுமானம், உங்கள் வவுச்சர் கட்டணத்தை விடக் கூடுதலான கட்டணங்களும் உங்களின் தனிப்பட்ட பேமெண்ட் முறையில் வசூலிக்கப்படும்.

உங்கள் கணக்கில் வவுச்சர்களைப் பார்த்தல்

  1. உங்கள் Uber ஆப்பைத் திறந்து கணக்கைத் தட்டவும்.
  2. "பணப்பை" என்பதைத் தட்டவும்.
  3. கீழே உருட்டி, "வவுச்சர்கள்" என்பதைத் தட்டவும்.

மற்றொரு பயணத்திற்கு வவுச்சரைச் சேமித்தல்

  1. "எங்கே செல்லவேண்டும்?" என்ற புலத்தில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும்.
  2. வாகன விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. "[vehicle type] ஐத் தேர்வுசெய்க" பொத்தானுக்கு மேலே உள்ள பேமெண்ட் முறையைத் தட்டவும்.
  4. வவுச்சருக்கு அடுத்துள்ள "மாற்று" என்பதைத் தட்டி வேறு பேமெண்ட் முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு: உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பயணச் சுயவிவரம் இருந்தால், நீங்கள் முதலில் ஒரு பயணத்திற்கு அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு வவுச்சருடனான சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.