காது கேளாதோர்/HOH ஓட்டுநர்கள் பற்றிய கவலைகள்

பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் Uber அனுபவத்தை முடிந்தவரை அணுகக்கூடியதாக மாற்ற நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம்.

ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளுதல்

காது கேளாத அல்லது கேட்கும்திறன் குறைவாக உள்ள ஓட்டுநரை அழைப்பதற்கான அம்சம் பயணிகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, ஓட்டுநர் உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால், அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பும்படி கேட்கப்படுவீர்கள். நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை ஓட்டுநருக்குச் சரியாகத் தெரிவிக்க, அவர் வருவதற்கு முன்னதாகவே அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

பயணத்தின்போது ஓட்டுநரைத் தொடர்பு கொள்வது

காது கேளாத அல்லது கேட்கும்திறன் குறைவாக உள்ள ஓட்டுநரைத் தொடர்பு கொள்வதற்கு உங்களுக்குச் சிறப்பாக உதவ, Uber ஊட்டத்தில் ஒரு சிறப்புக் கார்டை இப்போது காண்பீர்கள். இதன் மூலம் அமெரிக்க சைகை மொழியின் (ASL) அடிப்படை சொற்றொடர்களைச் சமிக்ஞை செய்யக் கற்றுக்கொள்ளலாம். அதைத் தட்டியதும், “ஹலோ”, “நன்றி” அல்லது ஓட்டுநரின் பெயரை எப்படி உச்சரிப்பது போன்ற அடிப்படைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

தேவையான தகுதிகள்

Uber மூலம் வாகனம் ஓட்டுவதற்கு இவை தேவை:

  • ஒரு பேக்ரெளண்ட் சரிபார்ப்பு
  • செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
  • தெளிவான வாகன ஓட்டுதல் பதிவு

Uber ஆப் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் பணியாற்றுகிறோம்.

வழிசெலுத்தல்

ஒரு ஓட்டுநர் பயணத்தை அக்செப்ட் செய்தவுடன், பயணிகள் தங்கள் சேருமிடத்தை முன்கூட்டியே உள்ளிடும்படி கேட்கப்படுவார்கள். இந்த ஆப், ஓட்டுநருக்கு திருப்பத்துக்குத் திருப்பம் வழிகாட்டும்.

நீங்கள் சேருமிடத்தைப் புதுப்பிக்க வேண்டும் அல்லது நிறுத்தத்தைச் சேர்க்க வேண்டும் என்றால், ஆப்பில் உங்கள் பயணத்தைப் புதுப்பிக்கவும்.