ஓர் அவசரகாலத் தொடர்பு என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்வு ஏற்பட்டு Uber ஆல் உங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாத போது தொடர்பு கொள்ளப்படக் கூடிய நீங்கள் தெரிவு செய்யும் ஒருவராவார்.
ஓர் அவசரகாலத்தில், Uber முதலில் உங்களைத் தொடர்பு கொள்ள முயலும், அது முடியாவிட்டால், Uber நீங்கள் பட்டியலிட்டுள்ள அவசரகாலத் தொடர்பை அழைக்கும்.
உங்கள் அவசரகாலத் தொடர்பை நாங்கள் அழைத்தால், அதன் காரணம்:
புலனாய்வு: என்ன நடந்தது, யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பன உள்ளிட்ட அவசரகால நிகழ்வைப் பற்றிய தகவல்களை சேகரிக்க உதவுகிறது.
தகவலளித்தல்: அவசரகால நிகழ்வில் என்ன நடந்தது என்பதைப் பற்றித் தொடர்பாளர்களுக்கு அறிவிக்க.
Uber ஆல் அவசர நிலைகளாக வரையறுக்கப்பட்ட நிகழ்வுகள் இவையாகும்:
மிகவும் அரிதானது என்றாலும், இவை பயணத்தின் போது எச்சூழ்நிலையிலும் ஏற்படலாம்.
அவசரகால தொடர்பாக நீங்கள் எந்த எண்ணையும் சேர்க்கலாம், ஆனால் Uber 2 தொடர்புகளை மட்டுமே தொடர்பு கொள்ள முயலும், கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட 2-க்கு முன்னுரிமை அளிக்கும்.
முதல் அவசரகாலத் தொடர்பு கொண்ட நபருடன் Uber தொடர்பு கொள்ள முடிந்தால், இரண்டாவது நபரை நாங்கள் தொடர்பு கொள்ள மாட்டோம்.
பயனர் தரவு தனியுரிமைக்கு Uber உறுதிபூண்டுள்ளது. உங்கள் தொடர்புகள் அவசரகாலங்களில் மட்டுமே அழைக்கப்படுவார்கள். நீங்கள் உங்கள் கணக்கிலிருந்து அவசரத் தொடர்பை நீக்கினால், Uber-உம் உடனடியாக அத்தகவலை நீக்கும்.