Uber Shuttle குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Uber Shuttle என்றால் என்ன?

Uber Shuttle என்பது உங்களுக்கு ஏற்ற, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை அனுபவிக்க ஒரு புதிய வழியாகும்.

சுத்தமான, குளிரூட்டப்பட்ட மற்றும் உயர்தரப் பேருந்தில் உங்கள் இருக்கையை முன்பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை Uber Shuttle பயன்படுத்துகிறது. ஆப்பின் மூலம் நீங்கள் பயணத்தைக் கோரும்போது, முன்பதிவு செய்யக்கூடிய அனைத்து சாத்தியமான நேரங்களையும் நீங்கள் பார்க்கலாம், இதனால் ஒரு வாரம் முன்னதாகவே பயணத்தைத் திட்டமிடலாம். மேலும், நீங்கள் மற்ற Uber பயணிகளுடன் உங்கள் பயணங்களைப் பகிர்வதால், Uber இன் அதே தரநிலைகளுடன் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற விலையையும் பெறுவீர்கள்.

Where is it available?

Currently, Uber Shuttle is only available in Mexico City and select cities in Egypt and India.

What is the pricing for a trip?

The pricing is based on the distance of your trip. Tariffs differ depending on the city.

Uber Shuttle மூலம் பயணம் செய்வது எப்படி?

  1. புதுப்பித்தல்: Uber ஆப்பின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
  2. கோருதல்: உங்கள் சேருமிடத்தை உள்ளிட்டு, Shuttle விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கட்டணத்தை மதிப்பாய்வு செய்து, உங்களுக்கு விருப்பமான பிக்அப் நேரத்தையும் இருக்கைகளின் எண்ணிக்கையையும் தேர்ந்தெடுத்த பின் கோரிக்கை என்பதைத் தட்டவும்.
  3. பயண விவரங்கள்: உங்கள் பயண விவரங்களைப் பார்க்க, சில நிமிடங்கள் காத்திருக்கவும். ஆப்பில் உங்கள் பயணத்தைப் பற்றிய தகவலைப் பார்க்கலாம்: ஓட்டுநர் மற்றும் பிக்அப் இடம் குறித்த தகவல். இப்போது, சுத்தமான, குளிரூட்டப்பட்ட வாகனத்தில் உங்கள் இருக்கை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் பிக்அப் இடத்திற்கு வந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்காணிக்கலாம்.
  4. நடந்து செல்வது: வரைபடத்தில் காட்டப்படும் பிக்அப் இடத்துக்கு நடந்து செல்லுங்கள், உங்கள் பேருந்து பிக்அப் இடத்தை அடையும் முன் நீங்கள் அங்கே சென்று சேர்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். பிக்அப் இடத்தில் பேருந்து இரண்டு நிமிடங்கள் மட்டுமே காத்திருக்கும்.
  5. பயணம்: பேருந்தில் ஏறியவுடன் ஓட்டுநரிடம் உங்கள் டிக்கெட்டைக் காட்டி ரொக்கமாகவோ அல்லது ஆப்பின் மூலமாகவோ பணத்தைச் செலுத்துங்கள். பேருந்தில் உங்கள் தனிப்பட்ட இருக்கையில் பயணத்தை அனுபவியுங்கள்.
  6. சேருமிடத்திற்கு நடந்து செல்வது: நீங்கள் சேருமிடத்தை நெருங்கும்போது, உங்கள் இறுதிச் சேருமிடத்திற்கு அருகில் இருக்கும் மற்றும் நீங்கள் செல்லும் வழிக்கு ஏற்றதாக இருக்கும் சிறந்த டிராப் ஆஃப் இடத்தை நாங்கள் கண்டறிவோம். நீங்கள் இறுதியாகச் சென்று சேரவேண்டிய இடத்திற்கு நடந்து செல்வதற்கான வழிகளை ஆப்பில் காணலாம்.

Uber Shuttle ஆப்பைப் பயன்படுத்தியும் பயணத்தைக் கோரலாம். Uber Shuttle ஆப் அனைத்து Android சாதனங்களிலும் அனைத்து நெட்வொர்க் நிலைகளிலும் வேலை செய்கிறது.

நான் முன்பதிவு செய்யலாமா?

ஆம், கோரப்பட்ட நேரம் மற்றும் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு எந்த நேரத்திலும் முன்பதிவு செய்யலாம். வாரம் முழுவதும் ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

இந்த மாவட்டத்தைத் தவிர மற்ற பகுதிகளில் வாகனத்தின் காட்சியை ஏன் என்னால் பார்க்க முடியவில்லை?

நீங்கள் வாகனம் செல்லும் வழியின் அருகில் இல்லையென்றால், உங்களால் வாகனத்தைப் பார்க்க முடியாது. மற்ற மாவட்டங்களில் வழிகள் செயல்படுத்தத் தொடங்கும் போது, நீங்கள் அவற்றின் காட்சியைப் பார்க்கத் தொடங்குவீர்கள்

எனது நகரத்தில் எங்கிருந்தும் என்னால் shuttle ஐ ஆர்டர் செய்ய முடியுமா?

இல்லை. நாங்கள் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே சேவையளிக்கிறோம். எனவே உங்கள் பிக்அப் மற்றும் டிராப் ஆஃப் இடங்கள் அந்தப் பகுதிகளுக்கு அருகில் இருக்க வேண்டும்.

நான் ஒரு நண்பருடன் பயணம் செய்யலாமா?

ஆம். உங்கள் சொந்தக் கணக்கிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்குப் பயணங்களைக் கோரலாம்.

பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை என்ன?

அதிகபட்சமாக மூன்று பயணிகள் இருக்கலாம்.

COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

Shuttle பயணங்களுக்கான சுகாதார முன்னெச்சரிக்கைகள் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுகிறோம்.

நண்பரை நான் எவ்வாறு பரிந்துரைப்பது?

குறைந்தது 1 ஷட்டில் பயணத்தை மேற்கொண்டுள்ள எந்தவொரு பயணியும் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர். நண்பரைப் பரிந்துரைக்க, பின்வரும் படிகளைச் சரிபார்க்கவும்:

  • Uber ஆப் மெனு பட்டிக்குச் செல்லவும்.
  • "இலவச ஷட்டில் பயணங்கள்”-ஐத் தேர்ந்தெடுக்கவும்
  • .
  • திட்டங்களின் விவரங்களைப் படிக்க அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்”-ஐத் திறக்கவும்.
  • “நண்பர்களை பரிந்துரைக்கவும்” பொத்தானை தட்டவும்.
  • Whatsapp, SMS, மின்னஞ்சல் போன்றவற்றின் மூலம் ரெஃபரல் குறியீட்டை எவ்வாறு அனுப்ப விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  • உங்கள் இலவசப் பயணங்களைப் பெற, உங்கள் நண்பர்/களின் முதல் இலவசப் பயணத்தை ரெஃபரல் குறியீட்டைப் பயன்படுத்தச் சொல்லுங்கள்.