அடையாளத்தைச் சரிபார்த்தல் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Uber ஏன் எனது கணக்கு மற்றும்/அல்லது அடையாளத்தை நான் சரிபார்க்க வேண்டும் என்று கோருகிறது? Uber இல் உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. சில தயாரிப்புகளின் பயனர்கள் தங்கள் கணக்குகள் அல்லது அவர்கள் எங்களிடம் தெரிவிக்கும் அடையாளங்களைச் சரிபார்க்க வேண்டும். எங்கள் பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவவும் மற்றவர்கள் உங்கள் கணக்கைப் பயன்படுத்துவதைத் தடுக்க உதவவும் நாங்கள் இதைச் செய்கிறோம்.

எனது கணக்கு மற்றும்/அல்லது அடையாளத்தை Uber எவ்வாறு சரிபார்க்கிறது? உங்கள் கணக்கு மற்றும்/அல்லது அடையாளத்தை நாங்கள் பல்வேறு வழிகளில் சரிபார்க்கலாம். சில நாடுகளில், பயணிகள் அவர்களின் அடையாள எண்ணை வழங்க மற்றும்/அல்லது அவர்களின் அடையாள அட்டையின் புகைப்படத்தை எடுக்க Uber அனுமதிக்கிறது. ID இன் சரிபார்ப்பை முடிப்பதோடு, அந்த ஆவணத்துடன் வேறு எந்தக் கணக்கும் இணைக்கப்படவில்லை என்பதையும் Uber சரிபார்க்கும்.

பயணிகள் தங்கள் கணக்கைச் சரிபார்க்க உதவுவதற்காக, தங்களைத் தாங்களே புகைப்படம் எடுக்கவும் Uber அனுமதிக்கக்கூடும். இந்தப் புகைப்படங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை உறுதி செய்ய Uber நடவடிக்கை எடுக்கிறது, மேலும் அவை உங்கள் ஓட்டுநருடன் ஒருபோதும் பகிரப்படாது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்தப் புகைப்படங்களையும் நாங்கள் நீக்கிவிடுவோம்.

உங்கள் கணக்கு மற்றும்/அல்லது அடையாளத்தை எங்களால் சரிபார்க்க முடியாவிட்டால் (தேவையான தகவலைச் சமர்ப்பிக்கத் தவறியதால்), நீங்கள் பணமாகச் செலுத்தி சில Uber தயாரிப்புகளைப் பயன்படுத்த முடியாமல் போகலாம் அல்லது உங்கள் Uber கணக்கில் கட்டணம் செலுத்தும் முறையாக கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பதிவேற்ற வேண்டியிருக்கலாம்.

எனது கணக்கு மற்றும்/அல்லது அடையாளத்தைச் சரிபார்க்க Uber மூன்றாம் தரப்பினர்களைப் பயன்படுத்துகிறதா? சில சமயங்களில், உங்கள் கணக்கு அல்லது அடையாளத்தை Uber சார்பாக மூன்றாம் தரப்பினர் சரிபார்க்கலாம். உங்கள் அடையாளம் மற்றும் ஆவணங்களைச் சரிபார்ப்பது அல்லது வழக்கமான தணிக்கை, உங்கள் ஆவணங்கள் மற்றும் தகவலைப் பகிர்வது அல்லது வெளிப்படுத்துவது அல்லது அவற்றைத் தக்கவைத்துக்கொள்வது தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் உங்கள் தகவலைப் பயன்படுத்துவதற்கு அந்த மூன்றாம் தரப்பினர்கள் ஒப்பந்தப்படி தடைசெய்யப்பட்டுள்ளனர். Uber இன் சார்பாக அவர்களின் சேவைகளை மேற்கொள்வதற்கு அவசியமான காலத்தைத் தாண்டி உங்கள் ஆவணங்களையோ அல்லது தகவல்களையோ தக்கவைத்துக்கொள்ள அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Uber எனது தனிப்பட்ட தகவலை ஓட்டுநர்கள், டெலிவரி செய்பவர்கள் அல்லது பிற மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்துகொள்கிறதா? Uber இன் சில சேவைகளுக்கும் அம்சங்களுக்கும் தனிப்பட்ட தரவை பிற பயனர்களுடன் அல்லது பயனரின் வேண்டுகோளின் பேரில் பகிர வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் கோரும் பயணங்கள் அல்லது டெலிவரிகளை இயக்க, நாங்கள் உங்கள் முதல் பெயரைப் பகிர்ந்து கொள்கிறோம் மற்றும் பிக்அப், டிராப்-ஆஃப் அல்லது டெலிவரி செய்யும் இடத்தை ஓட்டுநர் அல்லது டெலிவரி செய்பவரிடம் பகிர்கிறோம். நீங்கள் ஒரு கணக்கு அல்லது அடையாள சரிபார்ப்பு செயல்முறையை முடித்துவிட்டீர்கள் என்கிற தகவலை உங்கள் ஓட்டுநர் அல்லது டெலிவரி செய்பவரிடம் நாங்கள் உறுதிப்படுத்தவும் செய்யலாம். இது தவிர வேறு எதற்காகவும் உங்கள் தகவலை ஓட்டுநர்கள் அல்லது டெலிவரி செய்பவர்களுடன் Uber பகிர்ந்து கொள்ளாது.

சட்டப்பூர்வ காரணங்களுக்காக அல்லது உரிமைகோரல்கள் அல்லது தகராறுகள் தொடர்பாக, அத்தகைய தரவை எங்கள் இணை நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் பார்ட்னர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு, Uber இன் தனியுரிமை அறிக்கையைப் பாருங்கள்.

ஓட்டுநர்களும் டெலிவரி செய்பவர்களும் தங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டுமென்பதை Uber அவசியாமாக்குகிறதா? ஆம், Uber தளத்தைப் பயன்படுத்துவதற்கு கணக்கை உருவாக்கும்போது, அனைத்து ஓட்டுநர்களும் டெலிவரி செய்பவர்களும் தங்கள் அடையாளச் சரிபார்ப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்களுடன் செல்ஃபி பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த, ஓட்டுநர்களும் டெலிவரி செய்பவர்களும் அவ்வப்போது செல்ஃபி எடுக்க வேண்டும். அவர்களின் சரிபார்ப்பு ஆவணங்கள் காலாவதியானால் அவர்கள் புதிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

எனது அடையாளத்தைச் சரிபார்க்க நான் சமர்ப்பிக்கும் தகவலை Uber எவ்வாறு பாதுகாக்கிறது? Uber உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருக்க உறுதிபூண்டுள்ளது. உங்கள் அடையாளத்தை மற்றும்/அல்லது உங்கள் கணக்கை சரிபார்க்க நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களைக் குறியாக்கம் செய்வது, தொடர்பில்லாத நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துவதைத் தடுப்பது, பொருந்தும் சட்டங்களின் விதிக்கிணங்க, எங்கள் தனியுரிமை அறிக்கைக்கு ஏற்ப, அவற்றை நாங்கள் சேகரித்த நோக்கங்களுக்கான தேவை முடியும் வரை மட்டுமே தக்கவைத்திருத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

எனது அடையாளத்தைச் சரிபார்க்கும் போது சிக்கல் ஏற்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்? உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதில் சிக்கல் இருந்தாலோ அல்லது எங்கள் அமைப்புக்கள் தவறு செய்ததாக நீங்கள் நினைத்தாலோ, Uber ஆதரவைத் தொடர்பு கொள்ளுங்கள்.