நீங்கள் புளூடூத் மற்றும் அருகிலுள்ள வைஃபைச் சைகைகள் வழியாகச் சேகரிக்கப்பட்ட இருப்பிடத் தரவுகள் போன்றவற்றைப் பதிவு செய்யும் போது Uber உங்கள் இருப்பிடத் தகவல்களைப் பகிர அனுமதிக்க உங்கள் சாதனத்தால் கேட்கப்பட்ட ஒரு கோரிக்கையைப் பார்ப்பீர்கள். இயல்பு நிலையாக, கிடைக்கக்கூடிய சிறந்த சேவைக்கு, ஆப் இருப்பிடச் சேவைகளை இயக்கக் கேட்கும் போது "ஆப்பைப் பயன்படுத்தும் போது மட்டுமே அனுமதி" என்பதை முடுக்குங்கள். உங்களுக்கு அருகிலுள்ள ஓட்டுநரைக் கண்டுபிடித்து, உங்கள் இடத்தைத் தொடர அவர்களுக்கு உதவ இருப்பிடத் தரவுகளைப் பயன்படுத்துகிறோம். உங்கள் ரசீதுகளில் பயண வரலாற்றைக் காட்டவும், ஆதரவுச் சீட்டுக்களைப் புரிந்து கொண்டு தீர்க்கவும், மென்பொருள் பிழைகளைச் சரிசெய்யவும் இதைப் பயன்படுத்துகிறோம்.
நீங்கள் Android சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் தேர்வுசெய்ய 3 இருப்பிட அமைப்புக்கள் இருக்கும்:
உங்கள் சாதனத்தின் இருப்பிட விருப்பங்களில் உங்கள் இருப்பிட அமைப்புக்களை எப்போது வேண்டுமானலும் நிர்வகிக்கலாம்.
சில சந்தர்ப்பங்களில், எங்கள் சேவையில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களைப் பற்றிய தகவல்களை நகரங்கள், அரசாங்கங்கள், உள்ளூர் போக்குவரத்து அதிகார சபைகள் என்பவற்றுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.
இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய, எங்கள் தளத்திலுள்ள சாதனங்கள், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களில் இருந்து புவி இருப்பிடம் மற்றும் நேர முத்திரைத் தரவைச் சேகரிக்கிறோம்.
இந்தத் தரவு, ஒவ்வொரு பயணமும் எங்கு தொடங்குகிறது, நிறுத்தப்படுகிறது மற்றும் பயணம் மேற்கொண்ட வழி பற்றிய தகவல்களை நகரங்களுக்கு வழங்குகிறது. நகரங்களுக்கு வழங்கும் பயணத் தரவு எதுவும் உங்கள் தனிப்பட்ட மொபைல் சாதனத்திலிருந்து சேகரிக்கப்படாது அல்லது உங்களை நேரடியாக அடையாளப்படுத்தாது.
உங்கள் இருப்பிடத் தகவலை எங்கள் தனியுரிமை அறிக்கைக்கு ஏற்ப பயன்படுத்துவோம்.