ஓட்டுநருக்கான தரமதிப்பீட்டை எவ்வாறு மாற்றுவது?

பயணத்திற்குப் பிறகு உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட ரசீதில் இருந்து, ஓட்டுநருக்கு நீங்கள் கொடுத்த நட்சத்திரத் தரமதிப்பீட்டை மாற்றலாம்.

மின்னஞ்சலில், “மதிப்பிடவும்/வெகுமானமளிக்கவும்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதற்குப் பிறகு, uber.com தளத்தில் உள்ள உங்கள் கணக்கிற்குத் திருப்பிவிடப்படுவீர்கள். அங்கு ஓட்டுநருக்கு நீங்கள் ஏற்கனவே கொடுத்த நட்சத்திரத் தரமதிப்பீட்டை மாற்றலாம். பயணம் ரத்துசெய்யப்பட்டிருந்தால், ஓட்டுநருக்குத் மதிப்பிடுவதற்கான விருப்பத்தேர்வு காட்டப்படாது.

ரசீது மின்னஞ்சலை மீண்டும் அனுப்ப:

  1. உங்கள் ஆப் மெனுவைத் திறந்து “எனது பயணங்கள்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  2. பயணத்தைத் தேர்ந்தெடுத்து “ரசீது” என்பதைத் தட்டவும்
  3. கீழே ஸ்க்ரோல் செய்து “மின்னஞ்சலை மீண்டும் அனுப்பு” என்பதைத் தட்டவும்

ஓட்டுநர் ஒருவருக்கு நீங்கள் 1 நட்சத்திரத் தரமதிப்பீட்டை அளித்தால், எதிர்காலத்தில் அந்த ஓட்டுநருடன் உங்களை இணைக்காமலிருக்க முயல்வோம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் ஆதரவளிப்பதற்காக தரமதிப்பீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. துல்லியமான தரமதிப்பீட்டை வழங்குவதற்கும், உங்கள் பின்னூட்டத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் நேரம் ஒதுக்குவதன் மூலம், Uber தளத்தில் உள்ள அனைவருக்கும் பயணத் தரத்தை உறுதிப்படுத்த நீங்கள் எங்களுக்கு உதவுகிறீர்கள்.