Android இல் சேமித்த இடங்களைச் சேர்த்தல்

ஆப்பில், அலுவலகம் அல்லது வீடு போன்ற அடிக்கடி செல்ல வேண்டிய இடங்களை நீங்கள் சேர்க்கலாம்.

உங்கள் வீடு அல்லது பணியிட முகவரியைச் சேமிக்க:

  1. முதன்மைத் திரையில், "கணக்கு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. "அமைப்புகள்" என்பதைத் தட்டவும்.
  3. "வீட்டைச் சேர்க்கவும்" அல்லது "பணியிடத்தைச் சேர்க்கவும்" என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் வீடு அல்லது பணியிட முகவரியை உள்ளிடவும்.

முகவரிகள் ஆப்பின் கணக்கு அமைப்புகள் பிரிவில் உள்ள உங்களுக்குப்பிடித்தவை பட்டியலில் தோன்றும்.

பிடித்தவை என்பதில் இருந்து பணியிடம் அல்லது வீட்டு முகவரியை அகற்ற:

  1. முதன்மைத் திரையில், "கணக்கு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. "அமைப்புகள்" என்பதைத் தட்டவும்.
  3. “வீடு” அல்லது “பணி” என்பதற்கு அடுத்துள்ள “நீக்குக” என்பதைத் தட்டவும்.

சேமித்த பிற இடங்களைச் சேர்த்தல் மற்றும் அகற்றுதல்

நீங்கள் ஒரு சேருமிடத்திற்குச் சென்ற பிறகு, உங்கள் ஆப்பின் ஊட்டத்தில் “இந்த இலக்கைச் சேமிக்கவும்” என்ற கார்டைக் காண்பீர்கள்.

  1. ”சேமித்த இடங்களில் சேர்க்கவும்” என்பதைத் தட்டவும்.
  2. இடத்தின் பெயர் அல்லது புனைப்பெயரை உள்ளிடவும் ("ஜோவின் வீடு" அல்லது "செல்லப்பிராணிகள் ஸ்டோர்" போன்றவை)
  3. "சேமிக்கவும்" என்பதைத் தட்டவும்.

அமைப்புகளிலிருந்து சேமித்த இடத்தைச் சேர்க்க:

  1. முதன்மைத் திரையில், "கணக்கு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. "அமைப்புகள்" என்பதைத் தட்டவும்.
  3. "மேலும் சேமிக்கப்பட்ட இடங்கள்" என்பதைத் தட்டி, பின் "சேமிக்கப்பட்ட இடத்தைச் சேர்க்கவும்" என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தின் முகவரியை உள்ளிடவும்.
  5. இடத்தின் பெயர் அல்லது புனைப்பெயரை உள்ளிடவும் ("ஜோவின் வீடு" அல்லது "செல்லப்பிராணிகள் ஸ்டோர்" போன்றவை)
  6. "சேமிக்கவும்" என்பதைத் தட்டவும்.

சேமித்த இடத்தை அகற்ற:

  1. முதன்மைத் திரையில், "கணக்கு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. "அமைப்புகள்" என்பதைத் தட்டவும்.
  3. "மேலும் சேமிக்கப்பட்ட இடங்கள்" என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் அகற்ற விரும்பும் இடத்திற்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகளைத் தட்டவும்.
  5. "அகற்றவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.