உங்கள் ஓட்டுநரை TalkBack மூலம் தொடர்பு கொள்ளுதல்

நீங்கள் இணைக்கப்பட்டதும் உங்கள் ஓட்டுநரை அழைப்பதற்கான அல்லது செய்தி அனுப்புவதற்கான விருப்பங்கள் உங்கள் திரையின் அடிப்பகுதியில் உள்ள வெள்ளைப் பட்டியில் தோன்றும்.

ஓட்டுநரின் பெயர் மற்றும் வாகனத் தகவல்கள் தோன்றும் வெள்ளைப் பட்டியில் தொலைபேசி ஐகான் மற்றும் செய்தி உள்ளீட்டுப் பெட்டி உள்ளது.

உங்கள் டிரைவரை அழைக்க:

  1. ஓட்டுநரின் தகவலுக்குக் கீழ் வட்ட வடிவ தொலைபேசி ஐகானை ஒருமுறை தட்டி, பின்பு இருமுறை தட்டவும்
  2. தொலைபேசி எண் அல்லது “இலவச அழைப்பு” பொத்தானை ஒருமுறை தட்டி, பின்பு இருமுறை தட்டவும்
  3. நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் படி உங்கள் ஃபோன் தானாகவே உங்கள் ஓட்டுநரை அழைக்கும்

உங்கள் ஓட்டுநருக்குச் செய்தி அனுப்ப:

  1. ஓட்டுநரின் தகவலுக்குக் கீழ் உள்ள உரைப் புலத்தை ஒருமுறை தட்டி, பின்பு இருமுறை தட்டவும்
  2. உங்கள் உரைச்செய்தியைத் தட்டச்சு செய்யவும் அல்லது பேசவும்
  3. ”அனுப்புக” பொத்தானை ஒருமுறை தட்டவும், பின்பு இருமுறை தட்டவும்