எனது தொலைபேசியை ஒரு வாகனத்தில் தவறவிட்டுவிட்டேன்

உங்கள் தொலைபேசியை ஒரு வாகனத்தில் விட்டுவிட்டு, உங்கள் கணக்கில் உள்நுழைய முடியா விட்டால், எங்களுக்குத் தெரியப்படுத்த கீழே உள்ள படிவத்தை நிரப்புங்கள். இது எவ்வளவு ஏமாற்றமளிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம்.

உங்கள் கணக்கில் பயணத்தைக் கோரினீர்களா?

கீழே உள்ள படிவத்தை நிரப்பும் போது கவனிக்க வேண்டியவை:

  • பாதுகாப்புக் காரணங்களுக்காக, உங்களுக்கு உதவ உங்கள் அடையாளத்தையும் கணக்கையும் நாங்கள் சரிபார்க்க வேண்டும்.
  • உங்கள் எண்ணைப் பகிர எங்களுக்கு அனுமதி வழங்குவதன் மூலம், இந்தப் பயணத்துக்காக Uber உங்கள் எண்ணை ஓட்டுநருடன் பகிர்ந்து கொள்ளும் என்றும் இந்தத் தொலைபேசி எண்ணைக் கொண்டு ஓட்டுநர் உங்களை நேரடியாகத் தொடர்பு கொள்வார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பகிர ஒப்புக்கொண்ட தொலைபேசி எண்ணை ஓட்டுநர் பயன்படுத்தினால் அதற்கு Uber பொறுப்பல்ல.
  • ஓட்டுநரின் நேரத்துக்கும் முயற்சிக்கும் பணம் செலுத்த, நீங்கள் தவறவிட்டப் பொருளைப் பெற்றதும், உங்கள் கணக்கில் பணம் வசூலிக்கப்படலாம் (இடத்துக்கு ஏற்றவாறு தொகை வேறுபடும்).

வேறு ஒருவர் பயணத்தைக் கோரினாரா?

வேறு ஒருவர் கோரிய பயணத்தில் உங்கள் கைப்பேசியை அந்த வாகனத்தில் நீங்கள் தவற விட்டுவிட்டால், பயணத்தைக் கோரியவர் தவறவிட்டப் பொருளைப் பற்றி அவரின் ஆப்பில் தெரிவிக்க வேண்டும்:

  1. "கணக்கு" என்பதைத் தட்டி, பின் "பயணங்கள்" என்பதைத் தட்டவும்.
  2. நீங்கள் கைப்பேசியைத் தவறவிட்ட பயணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. "தவறவிட்ட பொருளைக் கண்டுபிடிக்கவும்" என்பதைத் தட்டி, பின்னர் "தவறவிட்ட பொருளைப் பற்றி அறிய ஓட்டுநரைத் தொடர்புகொள்ளவும்" என்பதைத் தட்டவும்.
  4. பயணத்தைக் கோரியவர் ஓட்டுநரை அழைத்து உங்கள் கைப்பேசியைத் திரும்பத் தர அவருடன் ஒருங்கிணைந்து செயல்பட அவரது தொலைபேசி எண்ணை உள்ளிடலாம்.
  5. அவர்களால் ஓட்டுநரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனில், “தவறவிட்டப் பொருளைக் கண்டுபிடித்தல்” என்ற பக்கத்திற்குச் சென்று, “தவறவிட்டப் பொருளைப் பற்றி அறிய எனது ஓட்டுநரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அவர்கள் படிவத்தை நிரப்பலாம், உதவ நாங்கள் தொடர்பில் இருப்போம்.

உங்கள் பொருளை நீங்கள் விரைவில் திரும்பப் பெறுவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், எனினும் ஒரு பயணம் முடிந்த பிறகு வாகனத்தில் விட்டுச்செல்லும் எந்தப் பொருளுக்கும் Uber அல்லது ஓட்டுநர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். நாங்கள் உதவ காத்திருக்கிறோம், ஆனால் ஓட்டுநர்கள் தனி ஒப்பந்ததாரர்கள் என்பதால் அவர்களிடம் உங்கள் பொருள் இருப்பதற்கோ அதை அவர்கள் உங்களிடம் டெலிவரி செய்வார்கள் என்பதற்கோ எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது.

🇺🇸
open
+1
🇺🇸
open
+1
இது உண்மையிலேயே நீங்கள் தான் என்பதை உறுதிப்படுத்த தானியங்கு குறுஞ்செய்தி இங்கு அனுப்பப்படும். அதைத் திறந்து, எங்கள் குழுவின் உறுப்பினருடன் இணைக்க “மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும்” என்பதைத் தேர்வுசெய்யவும். Writing in from