TalkBack மூலம் பயணம் செய்யக் கோருதல்

TalkBack இயக்கப்பட்டிருந்தால் பயணத்தைக் கோரும் முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  1. "எங்கே செல்ல வேண்டும்?" எனும் பெட்டியை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும். சேருமிடத்தை உள்ளிடவும் அல்லது பரிந்துரைக்கப்பட்ட இடங்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
  2. உங்கள் பிக்அப் இடம் தானாகவே உங்கள் GPS இருப்பிடத்திற்கு அமைக்கப்படும். அதை மாற்ற, உங்கள் பிக்அப் இடத்தைத் தட்டவும், பின்னர் உங்கள் இடத்தை மாற்ற அதை இருமுறை தட்டவும்.
  3. உங்கள் பகுதியில் கிடைக்கும் வாகன விருப்பங்களை ஸ்வைப் செய்ய இரு விரல்களைப் பயன்படுத்தவும். உங்கள் பயணத்திற்காக ஒன்றைத் தேர்ந்தெடுக்க, அதை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும்.
  4. உங்கள் பயணத்தைக் கோர, உங்கள் திரையின் அடிப்பகுதியில் உள்ள "பிக்அப்பை உறுதிசெய்க" எனும் பொத்தானை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும்
  5. உங்கள் ஓட்டுநர் வந்ததும் ஓர் அறிவிப்பைப் பெறுவீர்கள். செய்தி உரக்க வாசிக்கப்படும்.
  6. பின்வரும் விருப்பங்களை அணுக, உங்கள் திரையின் அடிப்பகுதியில் உள்ள பட்டியை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும்:
  • ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளுதல் - வட்ட வடிவ தொலைபேசி ஐகானை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டி, உங்கள் ஓட்டுநரின் தொலைபேசி எண்ணை அழைக்கவும் அல்லது இலவச அழைப்பைச் செய்யவும்
  • பயணத்தை ரத்துசெய்தல் - "ரத்துசெய்" பொத்தானை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும், அதன் பின்னர் உறுதிப்படுத்த, "ரத்துசெய்" எனும் பொத்தானை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும்.
  • உங்கள் நிலையைப் பகிர்தல் - "நிலையைப் பகிர்" எனும் பொத்தானை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும், அதன் பின்னர் உங்கள் தொடர்புகளின் பட்டியலிலிருந்து நபர்களைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பயணத்தைக் கண்காணிக்க, Uber அந்தத் தொடர்புகளுக்கு ஓர் இணைப்பை உரைச்செய்தியாக அனுப்புகிறது.
  • கட்டணத்தைப் பிரித்தல் - "கட்டணத்தைப் பிரி" எனும் பொத்தானை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டி, ஒரு தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும்