எங்கள் சேவைக் குழுவைத் தொடர்புகொள்வதற்கு முன்பு, கீழேயுள்ள இணைப்பு மூலம் கணக்கை நீக்க முயற்சிக்கவும்.
குறிப்பு: உங்கள் Uber Eats கணக்கிலும் அதே தகவல்கள் இருந்தால், உங்களுடைய கோரிக்கை நிறைவு செய்யப்படும்போது அந்தக் கணக்கும் நீக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.
உங்கள் கணக்கை நீக்கிய பின்னர், அது உடனடியாகச் செயல்நீக்கப்படும். 30 நாட்களுக்குப் பிறகு அது நிரந்தரமாக நீக்கப்படும். மேலும் பயன்படுத்தப்படாத கிரெடிட்கள், ஊக்கத்தொகைகள் அல்லது வெகுமதிகள் ஏதேனும் இருந்தால் அவை அகற்றப்படும்.
கணக்கு நீக்கப்பட்ட பின்னர், தேவைப்படக்கூடிய அல்லது சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட சில தகவல்களை Uber தக்கவைத்துக் கொள்ளலாம்.
உங்களுடைய கணக்கை நீக்காமல் வைத்திருக்க நினைத்தால், அதைச் செயல்நீக்கிய 30 நாட்களுக்குள் uber.com தளத்தில் உள்நுழைந்து அதை மீட்டெடுக்கலாம்.
கணக்கை நீக்குவதற்கு உங்களுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டால், பொருத்தமான தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்: