உங்கள் தொலைபேசி எண்ணைச் சரிபார்க்கவோ உங்கள் கணக்கில் உள்நுழையவோ முடியவில்லை எனில், கீழே உள்ள இணைப்பைப் பின்தொடர்ந்து எங்களுடன் அரட்டையில் தொடர்புகொள்ளவும் என்பதைத் தேர்வுசெய்யவும்.
எங்கள் குழுவின் உறுப்பினருடன் இணைக்கப்படுவதற்கு முன், உங்கள் கணக்கின் விவரங்களைச் சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். உங்கள் கணக்கின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்தத் தகவல் தேவை.
உங்கள் கணக்கு கண்டுபிடிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் ஓட்டுநருடன் உங்களை இணைக்க உதவக்கூடிய எங்கள் தொலைந்த பொருட்கள் குழுவிடம் நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.
எங்களுடன் உரையாடும் போது கவனிக்க வேண்டியவை:
உங்கள் எண்ணைப் பகிர எங்களுக்கு அனுமதி வழங்குவதன் மூலம், இந்தப் பயணத்தின் ஓட்டுநருடன் Uber உங்கள் எண்ணைப் பகிர்ந்து கொள்ளும் என்பதையும், இந்தத் தொலைபேசி எண் மூலமாக ஓட்டுநர் உங்களை நேரடியாகத் தொடர்பு கொள்வார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் பகிர ஒப்புக்கொண்ட தொலைபேசி எண்ணை ஓட்டுநர் பயன்படுத்தினால் அதற்கு Uber பொறுப்பேற்காது.
உங்கள் தொலைபேசியைத் திரும்பத்தர ஓட்டுநர் எடுத்துக்கொண்ட நேரத்திற்க்கும் முயற்சிக்கும் ஈடு செய்யும் வகையில், உங்கள் தொலைபேசியை நீங்கள் திரும்பப் பெற்றுக்கொண்டதும், உங்கள் கணக்கில் திருப்பியளித்தலுக்கான கட்டணம் வசூலிக்கப்படலாம் (இடத்திற்கு ஏற்றவாறு தொகை வேறுபடும்).
வேறொருவர் கோரிய பயணத்தில் ஒரு வாகனத்தில் உங்கள் தொலைபேசியை நீங்கள் தவறவிட்டிருந்தால், தவறவிட்ட பொருளைப் பற்றி பயணத்தைக் கோரியவர் தனது Uber ஆப்பில் புகாரளிக்க வேண்டும்:
உங்கள் பொருளை நீங்கள் விரைவில் திரும்பப் பெறுவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், எனினும் ஒரு பயணம் முடிந்த பிறகு வாகனத்தில் விட்டுச்செல்லும் எந்தப் பொருளுக்கும் Uber அல்லது ஓட்டுநர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். நாங்கள் உதவ காத்திருக்கிறோம், ஆனால் ஓட்டுநர்கள் தனி ஒப்பந்ததாரர்கள் என்பதால் அவர்களிடம் உங்கள் பொருள் இருப்பதற்கோ அதை அவர்கள் உங்களிடம் டெலிவரி செய்வார்கள் என்பதற்கோ எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது.