உங்கள் Uber கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்

ஃபிஷிங் என்றால் என்ன?

ஃபிஷிங் என்பது உங்களது Uber கணக்குத் தகவலை (மின்னஞ்சல், தொலைபேசி எண் அல்லது கடவுச்சொல்) உங்களை ஏமாற்றி வெளியிடச் செய்யும் முயற்சியாகும். ஃபிஷிங் முயற்சிகள் பெரும்பாலும் கோரப்படாத மின்னஞ்சல் அல்லது SMS மூலம் போலி உள்நுழைவுப் பக்கத்திற்குச் செல்லும் லிங்க் அல்லது இணைப்பைக் கொண்டிருக்கும். Uber ஊழியர்கள் உங்கள் கடவுச்சொல் அல்லது மின்னஞ்சல் முகவரி உட்பட உங்கள் கணக்குத் தகவலைக் கோரி மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் உங்களை ஒருபோதும் தொடர்புகொள்ள மாட்டார்கள்.

உங்கள் Uber கணக்கு மின்னஞ்சல் அல்லது கடவுச்சொல்லை உள்ளிடும்படி நீங்கள் கேட்கப்பட்டால், உங்கள் உலாவியின் முகவரிப் பட்டியில் உள்ள URL https://www.uber.com என்று காண்பிக்கப்படுவதை உறுதிசெய்யுங்கள்.

ஃபிஷிங் நடைபெறுவதாகச் சந்தேகப்பட்டால் என்ன செய்வது

நீங்கள் Uber இலிருந்து வந்ததாகக் கூறும் செய்தியைப் பெற்றால், https://www.uber.com இல் இருந்து வராத வெளிப்புற லிங்கிற்குச் செல்லும்படி கேட்கும் இணைப்பைக் கிளிக் செய்யாதீர்கள் மேலும் எந்தத் தகவலையும் தெரிவிக்க வேண்டாம்.

உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி

  • மற்ற வலைத்தளங்களில் நீங்கள் பயன்படுத்தாத தனிப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்
  • உங்கள் கடவுச்சொல்லில் குறைந்தது 10 எழுத்துகள், சிற்றெழுத்து மற்றும் பெரிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு சின்னம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
  • https://www.uber.comஇல் உங்கள் உள்நுழைவு தகவலை மட்டும் வழங்கவும்
  • உங்கள் கணினியில் மிக சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்