ஒரு பயணம் முடிந்ததும், உங்கள் Uber கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தானாகவே ரசீதை அனுப்புவோம். நீங்கள் ரசீதுகளைப் பெறவில்லை என்றால், இந்த மின்னஞ்சல் முகவரியின் ஸ்பேம் அல்லது குப்பைக் கோப்புறைகளைப் பார்க்கவும். உங்கள் அப்ளிகேஷன் பட்டியலிலுருந்து ""அமைப்புகள்"" என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை மதிப்பாய்வு செய்யலாம்." அதைப் புதுப்பிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தட்டவும்.
உங்கள் Uber கணக்கில் நீங்கள் மேற்கொண்ட ஒவ்வொரு பயணத்தின் பயண வரலாறும் இருக்கும். உங்கள் ரசீதுகளைப் பார்ப்பதற்கான பல வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அப்ளிகேஷனில்:
1. "Uber ஆப் பட்டியலைத் திறந்து ""உங்கள் பயணங்கள்"" என்பதைத் தட்டவும்."
2. விரும்பிய பயணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
3. திரையின் வலது பக்கத்தில், செலுத்தப்பட்ட தொகைக்குக் கீழே, ""ரசீது"" என்பதைத் தட்டவும்."
இணையம்:
1. http://riders.uber.com/trips தளத்தில் உள்நுழையவும்.
2. "எனது பயணங்கள்" என்பதைக் கிளிக் செய்து, விரும்பிய பயணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
3. ""ரசீதைக் காண்க"" அல்லது ""ரசீதை மீண்டும் அனுப்பு"" என்பதைக் கிளிக் செய்யவும்." ""ரசீதைக் காண்க"" என்பதைக் கிளிக் செய்தால், அதை அங்கிருந்து PDF ஆக அச்சிடவோ, மீண்டும் அனுப்பவோ அல்லது பதிவிறக்கவோ முடியும்.
Help.uber.com:
1. help.uber.com தளத்திற்குச் சென்று உங்கள் Uber கணக்கில் உள்நுழையவும்.
2. உங்கள் மிகச் சமீபத்திய பயணக் கோரிக்கைக்கான தகவலைப் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட பயணத்தைத் தேர்ந்தெடுக்க கீழ்தோன்றும் பட்டியலைப் பயன்படுத்தவும்.
3. பொருத்தமான பயணம் தேர்ந்தெடுக்கப்பட்டதும், பார்க்க "ரசீது" என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னஞ்சல் வழியாக PDF ஐப் பதிவிறக்குதல்:
1. உங்கள் மின்னஞ்சல் ரசீதின் கீழ் இடது மூலையில் உள்ள "PDF ஐப் பதிவிறக்கு" என்பதைக் கிளிக் செய்யவும்.