எங்கள் சமூக வழிகாட்டல்களின் படி ஓட்டுநர்கள் ஓர் உயர்நிலை நடத்தையைப் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஓட்டுநர்களின் தொழில்நெறிக்கு மாறான நடத்தை, முறையற்ற விதத்தில் தொடுதல் அல்லது பண்பற்ற பேச்சு சகித்துக் கொள்ளப்படாது.
ஓட்டுநர்கள் எல்லா நேரங்களிலும் வாகனங்களைப் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் பயணத்தின் போது உங்களுக்குப் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் நடந்திருந்தால், இந்தப் பக்கத்தின் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் ஓட்டுநர் அல்லது அவரது வாகனம் பற்றி உங்களுக்கு வேறுவிதமான குறை இருந்தால், "எனது ஓட்டுநருடன் வேறு சிக்கல் இருந்தது" என்பதில் உள்ள படிவத்தை நிரப்பவும்.
உங்களுக்கு நியாயமற்ற முறையில் ரத்துக் கட்டணம் விதிக்கப்பட்டதாக நீங்கள் எண்ணினால், உங்கள் பயண வரலாற்றுக்குத் திரும்பிச் சென்று சம்பந்தப்பட்ட பயணத்தைத் தேர்ந்தெடுக்கவும். பயணத்தின் கீழ் "எனது ரத்து கட்டணத்தை மதிப்பாய்வு செய்யவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும், நாங்கள் அதைப் பரிசீலிப்போம்.