(iOS) பயணி ஆப்பைப் பதிவிறக்குதல்

iOS 8 மற்றும் அதை விடப் புதிய பதிப்பைக் கொண்ட சாதனங்களில், Uber பயணி ஆப்பைப் பதிவிறக்கி நிறுவலாம். உங்கள் மொபைல் சாதனத்தில் ஆப் ஸ்டோரைத் திறந்து, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்.

  1. கீழே உள்ள மெனு பட்டியில் "தேடல்" என்பதைத் தட்டவும், பின்னர் தேடல் பட்டியில் "Uber" என தட்டச்சு செய்யவும்
  2. தேடல் முடிவுகளில் இருந்து "Uber" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  3. Uber ஐகானுக்கு அடுத்துள்ள, "பெறு" என்பதைத் தட்டவும். நீங்கள் உங்கள் Apple ID அல்லது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டியிருக்கும்.
  4. பதிவிறக்கம் முடிந்ததும், "பெறு" என்பது "திற" என்று மாறும். ஆப்பைத் திறக்க "திற" என்பதைத் தட்டவும்.
  5. Uber ஆப்பில், உங்களிடம் கணக்கு இருந்தால் "உள்நுழை" அல்லது கணக்கை உருவாக்க "பதிவு" என்பதைத் தட்டவும்.