TalkBack இயக்கப்பட்டிருந்தால் பயணத்தைக் கோரும் முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
- "எங்கே செல்ல வேண்டும்?" எனும் பெட்டியை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும். சேருமிடத்தை உள்ளிடவும் அல்லது பரிந்துரைக்கப்பட்ட இடங்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பிக்அப் இடம் தானாகவே உங்கள் GPS இருப்பிடத்திற்கு அமைக்கப்படும். அதை மாற்ற, உங்கள் பிக்அப் இடத்தைத் தட்டவும், பின்னர் உங்கள் இடத்தை மாற்ற அதை இருமுறை தட்டவும்.
- உங்கள் பகுதியில் கிடைக்கும் வாகன விருப்பங்களை ஸ்வைப் செய்ய இரு விரல்களைப் பயன்படுத்தவும். உங்கள் பயணத்திற்காக ஒன்றைத் தேர்ந்தெடுக்க, அதை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும்.
- உங்கள் பயணத்தைக் கோர, உங்கள் திரையின் அடிப்பகுதியில் உள்ள "பிக்அப்பை உறுதிசெய்க" எனும் பொத்தானை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும்
- உங்கள் ஓட்டுநர் வந்ததும் ஓர் அறிவிப்பைப் பெறுவீர்கள். செய்தி உரக்க வாசிக்கப்படும்.
- பின்வரும் விருப்பங்களை அணுக, உங்கள் திரையின் அடிப்பகுதியில் உள்ள பட்டியை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும்:
- ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளுதல் - வட்ட வடிவ தொலைபேசி ஐகானை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டி, உங்கள் ஓட்டுநரின் தொலைபேசி எண்ணை அழைக்கவும் அல்லது இலவச அழைப்பைச் செய்யவும்
- பயணத்தை ரத்துசெய்தல் - "ரத்துசெய்" பொத்தானை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும், அதன் பின்னர் உறுதிப்படுத்த, "ரத்துசெய்" எனும் பொத்தானை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும்.
- உங்கள் நிலையைப் பகிர்தல் - "நிலையைப் பகிர்" எனும் பொத்தானை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டவும், அதன் பின்னர் உங்கள் தொடர்புகளின் பட்டியலிலிருந்து நபர்களைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பயணத்தைக் கண்காணிக்க, Uber அந்தத் தொடர்புகளுக்கு ஓர் இணைப்பை உரைச்செய்தியாக அனுப்புகிறது.
- கட்டணத்தைப் பிரித்தல் - "கட்டணத்தைப் பிரி" எனும் பொத்தானை ஒருமுறை தட்டி, பின்னர் இருமுறை தட்டி, ஒரு தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும்