மாநிலச் சட்டங்களும் கூட்டாட்சிச் சட்டங்களும் சேவை விலங்குகளை உடன் வைத்திருப்போர் உட்பட மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு எதிரான பாகுபாட்டைத் தடை செய்கின்றன. தளத்தைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்களையும் Uber இன் கொள்கைகளையும் பின்பற்ற ஒப்புக்கொள்கிறார்கள், இது ஓட்டுநர்கள் மாற்றுத்திறனாளி பயணிகளுக்குச் சேவையளிக்க மறுக்கவோ அல்லது அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டவோ கூடாது என்று கூறுகிறது.
சட்டவிரோதப் பாகுபாடு அல்லது பயணத்தை மறுத்தல் தொடர்பான புகாரை நாங்கள் மதிப்பாய்வு செய்யும் போது அது ஓட்டுநரின் கணக்கை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யலாம்.
மேலும், ஓட்டுநர்கள் வாக்கர்கள், கைத்தடிகள், மடக்கக்கூடிய சக்கர நாற்காலிகள் அல்லது பிற சிறிய உதவிச் சாதனங்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு முடிந்த வரை உதவியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.