Uber எவ்வாறு வேலை செய்கிறது?

Uber ஒரு தொழில்நுட்பத் தளம். எங்கள் ஸ்மார்ட்போன் ஆப்கள் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளை இணைக்கிறது.

Uber இயங்கும் நகரங்களில், பயணத்தைக் கோர, உங்கள் ஆப்பைப் பயன்படுத்தவும். அருகிலுள்ள ஓட்டுநர் உங்கள் கோரிக்கையை ஏற்கும்போது, உங்கள் பிக்அப் இடத்திற்கு வரும் ஓட்டுநரின் மதிப்பிடப்பட்ட வருகை நேரத்தை உங்கள் ஆப் காட்டும். ஓட்டுநர் இடத்தை அடையும் போது அதை ஆப் உங்களுக்குத் தெரிவிக்கும்.

முதல் பெயர், வாகன வகை, உரிமத் தகடு எண் ஆகியவை உட்பட, நீங்கள் சேர்ந்து பயணம் செய்யவிருக்கும் ஓட்டுநர் பற்றிய தகவலையும் உங்கள் ஆப் வழங்குகிறது. இந்தத் தகவல், உங்கள் இருவரையும் பிக்அப் இடத்தில் இணைக்க உதவுகிறது.

பயணத்திற்கு முன் அல்லது எப்போது வேண்டுமானாலும், நீங்கள் விரும்பும் சேரும் இடத்தை உள்ளிட உங்கள் ஆப்பைப் பயன்படுத்தவும். உங்களுக்கு விருப்பமான வழி இருந்தால், ஓட்டுநருடன் ஒன்றிணைந்து வழிகள் குறித்து பேசுவது உதவியாக இருக்கும்.

உங்கள் சேரும் இடத்தை அடைந்து வாகனத்திலிருந்து வெளியேறும்போது, உங்கள் பயணம் முடிகிறது. உங்கள் கட்டணம் தானாகக் கணக்கிடப்பட்டு, Uber கணக்கில் நீங்கள் இணைத்துள்ள பேமெண்ட் முறையிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சில நகரங்களில், Uber உங்கள் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்த அனுமதிக்கிறது. நீங்கள் பயணம் செய்வதற்கு முன் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பயணம் முடிந்த உடனேயே, உங்கள் ஓட்டுநருக்கு 1 முதல் 5 நட்சத்திரங்கள் வரை தரமதிப்பிடும்படி உங்கள் ஆப் கேட்கும். ஓட்டுநர்களும் பயணிகளை தரமதிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அனைவருக்கும் மரியாதை மற்றும் பொறுப்புடைமை கொண்ட ஒரு சமூகத்தை வளர்ப்பதற்கு ஏற்ப Uber இன் பின்னூட்ட அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிற உதவி மையத் தலைப்புகளைப் படிப்பதன் மூலம், Uber எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட கேள்வி பதில்களையும் நீங்கள் தேடலாம்.