UberX Share தற்காலிகமாகக் கிடைக்கவில்லை

உங்களையும், உங்கள் பயணிகளையும், நமது சமூகத்தையும் பாதுகாக்கும் எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 3/16 முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் UberX Share தயாரிப்பை நிறுத்தி வைக்கிறோம். தொற்றுநோயியல் நிபுணர், பொதுச் சுகாதார அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுடன் கலந்து பேசியபோது கிடைத்த வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது UberX மற்றும் Uber Eats இல் டெலிவரிகள் உட்பட மற்ற அனைத்து வகையான Uber தயாரிப்புகளும் இன்னும் கிடைக்கின்றன. உங்கள் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆப்பைப் பயன்படுத்தி பயணம் செய்பவர்களையும் வாகனம் ஓட்டுபவர்களையும் பாதுகாப்பதற்கு எங்களால் முடிந்தவற்றைச் செய்வதற்குத் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்போம். இதற்கிடையில், மேலும் வழிகாட்டுதலுக்கு உள்ளூர், மாநில மற்றும் கூட்டாட்சி அதிகாரிகள் கூறுவதைக் கேளுங்கள்.