பயணத்தின்போது நீங்கள் ஓட்டுநருக்கு வெகுமானம் கொடுத்திருந்தால், பயணம் முடியும் வரை ஆப்பில் உங்கள் வெகுமானத்தைத் திருத்தலாம். அதன்பிறகு, நீங்கள் முதலில் கொடுத்த வெகுமானத்தில் மட்டுமே சேர்க்க முடியும். பயணம் முடிந்து 90 நாட்கள் வரை (உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து) ஓட்டுநருக்கு வெகுமானத்தைச் சேர்க்கலாம். வெகுமானத் தொகையை உங்களால் சரிசெய்ய முடியாது.
வெகுமானத் தொகையைத் திருத்த (பயணத்தின்போது):
- Uber ஆப்பைத் திறக்கவும்.
- பயண விவரங்களை விரிவாக்க வெள்ளைத் திரையைத் தட்டவும்.
- தரமதிப்பீட்டிற்கு அடுத்துள்ள "திருத்துக" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் வெகுமானமாகக் கொடுக்க விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுத்து அல்லது உள்ளிட்டு, "சேமிக்கவும்" என்பதைத் தட்டவும்.
வெகுமானத்தில் சேர்க்க (பயணத்திற்குப் பிறகு 90 நாட்கள் வரை):
- Uber ஆப்பைத் திறக்கவும்.
- மெனு ஐகானைத் தட்டி, பின்னர் "உங்கள் பயணங்கள்" என்பதைத் தட்டவும்.
- வெகுமானத் தொகையை அதிகரிக்க விரும்பும் பயணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- "உங்கள் வெகுமானத்தில் தொகையைச் சேர்க்கவும்" என்பதைத் தட்டவும்.
- நீங்கள் வெகுமானமாகக் கொடுக்க விரும்பும் கூடுதல் தொகையை உள்ளிட்டு, "வெகுமானத்தை அமைக்கவும்" என்பதைத் தட்டவும்.
ஓட்டுநருக்கு எப்படி வெகுமானம் அளிப்பது என்பதை அறிய, இந்தக் கட்டுரையைப் பார்க்கவும்.