எனது கிரெடிட்டுகளை நான் எங்கே பார்க்கலாம்?

மெனுவிலிருந்து "பேமெண்ட்" என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் Uber கிரெடிட் நிலுவையைக் காணலாம். கிரெடிட் வழங்கப்பட்ட நாணய மதிப்பில் உங்கள் கிரெடிட் தொகை காட்டப்படும். Uber கிரெடிட்டை ஒரு நாணயத்திலிருந்து மற்றொரு நாணயத்துக்கு மாற்ற முடியாது.

உங்கள் அடுத்த பயணத்திற்கு இயல்புநிலையாக Uber கிரெடிட் தானாகவே பொருந்தும். பயணத்திற்கு முன் அல்லது பயணத்தின்போது, நீங்கள் விரும்பும் பேமெண்ட் முறையைத் தேர்ந்தெடுத்து, Uber கிரெடிட்டை தொடங்கலாம் அல்லது முடக்கலாம்.

பயணம் முடிந்ததும், நீங்கள் தேர்ந்தெடுத்த கட்டண முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். Uber கிரெடிட் முடக்கப்பட்டால், உங்கள் இயல்புநிலைக் கட்டணக் கணக்கில் முழுக் கட்டணமும் வசூலிக்கப்படும். Uber கிரெடிட் இயக்கப்பட்டிருந்து, அது உங்கள் பயணக் கட்டணத்தை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள கட்டணம் உங்கள் கட்டணக் கணக்கில் வசூலிக்கப்படும்.

உங்கள் கணக்கில் இலவசப் பயணம் இருந்தால், உங்களின் அடுத்த பயணம் தானாகவே இலவசமாக இருக்கும். இலவசப் பயணங்களை இயக்கவோ முடக்கவோ முடியாது.