வாய்ஸ்ஓவர் மூலம் ஆப் மெனுவில் வழிசெலுத்த, உங்கள் ஆப்பைத் திறந்து, மெனுவைத் திறக்க உங்கள் திரையின் மேல் இடதுபுறத்தில் இருமுறை தட்டவும். பின்வரும் விருப்பங்கள் மேலிருந்து கீழாகத் தோன்றும்:
எனது பயணங்கள் - இந்தப் பகுதி உங்கள் முந்தைய பயணங்களைப் பட்டியலிடுகிறது அல்லது வரவிருக்கும், திட்டமிடப்பட்ட பயணங்களை நீங்கள் காணலாம். உங்கள் பயண வரலாற்றை ஸ்வைப் செய்ய மூன்று விரல்களைப் பயன்படுத்தவும். பயணம் குறித்த உதவி பெற, பின்னூட்டங்களைச் சமர்ப்பிக்க அல்லது பயண ரசீது சீட்டைக் காண ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.
பணப்பை - இந்தப் பிரிவில் நீங்கள் கட்டண முறையைச் சேர்க்கலாம் அல்லது புதுப்பிக்கலாம்
உதவி - உங்கள் கேள்விகளுக்குப் பதிலைப் பெற, கட்டுரைகள் மூலம் தேடலாம். இந்தப் பிரிவில் அணுகல்தன்மை அம்சங்கள் பற்றிய பின்னூட்டத்தை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
இலவசப் பயணங்கள் - ஆப்பை பயன்படுத்துமாறு பிறரை அழைக்க இந்தப் பிரிவில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட அழைப்புக் குறியீட்டைப் பயன்படுத்தவும்
அமைப்புகள் - உங்கள் தொடர்புத் தகவலைப் புதுப்பிக்க, வீடு அல்லது அலுவலகம் போன்ற பிடித்த இடங்களை அமைக்க அல்லது பயணத்திற்கு முன்போ அல்லது பயணத்திலோ உங்கள் இடத்தை விரைவாகப் பகிர்வதற்கான தொடர்புகளைச் சேமிக்கலாம்
சேவை மையத்தைத் தொடர்புகொள்ளவும்
உங்களிடம் அணுகல்தன்மை தொடர்பான கேள்விகள் அல்லது பின்னூட்டம் இருந்தால், மெனுவின் "உதவி" பிரிவில் "அணுகல்தன்மை" என்பதைத் தட்டுவதன் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். மெனுவின் ”எனது பயணங்கள்" பிரிவில் இருந்து குறிப்பிட்ட பயணத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பயணம் தொடர்பான வேறு ஏதேனும் சிக்கலைப் புகாரளிக்கலாம். அடுத்த திரையில் இருந்து, சிக்கலைப் புகாரளிக்க பல்வேறு விருப்பங்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்.